Tuesday, July 5, 2011

ராம்தேவ் நிறுவனங்கள் குறித்து ஆராய்கிறது அமலாக்கத்துறை

புதுதில்லி, ஜூலை 5- பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான நிறுவனங்கள் பற்றிய ஆவணங்களை அமலாக்கத்துறை இயக்குநரகம் ஆராயவுள்ளது.


இதுதொடர்பாக நிறுவனங்கள் விவகார அமைச்சகம் மற்றும் நிறுவனங்களின் பதிவாளர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தி தகவல் அனுப்பியுள்ளது. இதன் மூலம், ராம்தேவ் நிறுவனங்களில் யாருக்கு எவ்வளவு பங்குகள் உள்ளது என்ற விவரமும் சேகரிக்கப்படுகிறது.


மேலும், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி அவரது நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் நடைபெறுகிறதா என்பது குறித்தும் ஆராய அமலாக்கத்துறை இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.


ஸ்காட்லாந்தில் பாபா ராம்தேவுக்கு சொந்தமாக உள்ள தீவு குறித்த தகவல் மற்றும் பதஞ்சலி யோக பீடம் அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் சுவாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றின் பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

dinamani

No comments:

Post a Comment