Friday, July 29, 2011

தலித்களின் வீடுகளை இடித்து, நிலத்தை ஆக்கிரமித்த ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட்!

திருச்சி: திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட் ரமேஷ் தங்களது வீடுகளை இடித்து தள்ளிவிட்டு நிலத்தை அபகரித்துக் கொண்டதாக திருச்சியில் உள்ள இ.புதூர் தலித்துகள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் தந்துள்ள புகார் மனுவில், இ.புதூர் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 31 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.
1993-94ம் ஆண்டில் இருந்து வீட்டு வரியையும் திருச்சி மாநகராட்சிக்கு செலுத்தி வந்தோம்ர்.

அங்கு வசித்த மக்களுக்கு மின்சாரம், குடிநீர், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் வழங்கப்பட்டிருந்தன.

இந் நிலையில், 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி ராஜாத்தி அம்மாளின் அக்கவுண்டன்ட் ரமேஷ், காரைக்குடியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் தம்பிராஜா என்பவருடன் வந்து, அந்த நிலத்தை தான் வாங்கிவிட்டதாக கூறி அங்கு குடியிருந்தவர்களை காலி செய்யுமாறு கூறினார்.

பின்னர் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அங்கிருந்த வீடுகளை இடித்து தள்ளிவிட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு குடியிருப்பவர்களை புகார் கொடுக்க தலைமையேற்று வந்த நிர்மலா தேவி என்பவர் நிருபர்களிடம் கூறுகையில், அங்கிருந்த எல்லா விடுகளையும் ஒரு மணி நேரத்தில் இடித்து தள்ளிவிட்டனர்.

நாங்கள் இதுபற்றி அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி, ஸ்ரீரங்கம் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடம் முறையிட்டோம். ஆனால், யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை.

அங்கிருந்த வீடுகளுக்கு ஆதரவான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என்றார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவை மாவட்ட வருவாய் அதிகாரி பேச்சியம்மாள், திருச்சி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
Thatstamil

No comments:

Post a Comment