21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலை தொடர்பான முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் கலவரங்கள் தொடர்பாக மோடி அரசால் அமைக்கப்பட்ட நானாவதி மேத்தா ஆணையத்தில் அரசு சார்பாக ஆஜராகும் குஜராத் அரசு வழக்கறிஞர் இதனை அறிவித்திருக்கிறார்.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் 2007ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்டன என்று எஸ்.பி.வகில் தெரிவித்திருக்கிறார்.
இது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து மாநில அரசின் மூத்த அதிகாரிகள் எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டன. குறிப்பாக குஜராத் மாநில உள்துறை கூடுதல் செயலாளர் பல்வந்த் சிங் இது குறித்து உறுதிபடுத்தவோ அல்லது மறுக்கவோ அவர் வாய் திறக்கவே இல்லை.
2002ம் ஆண்டு கோத்ராவில் சபர்மதி விரைவு ரயில் விபத்தில் எஸ்.6 என்ற பெட்டியில் பயணம் செய்த பயணிகள்&குறிப்பாக அயோத்தி சென்றுவிட்டு திரும் பிய ஒரு குறிப்பிட்ட மதவாத அமைப்பினர்& 56பேர் திடீரென தீ விபத்தில் சிக்கி பலியாயினர்.
விபத்து தகவல் வெளியான உடன் உலகம் முழுவதும் உள்ள மீடியாக்கள் அதனை ஒரு விபத்து என்றே குறிப்பிட்டன. விபத்து என்றே மத்திய மாநில அரசு இயந்திரங்களும் ஒப்புக் கொண்டிருந்த நிலையில் முதலமைச்சர் மோடி, விபத்து நிகழ்ந்த இடத்தையும் விபத் தில் பலியானவர்களின் உடல் களையும் பார்த்தபின் நிலை மை தலைகீழாக மாறியது. அதுவரை பலியானவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக இருந்த திட்டமும் தடாலடியாக மாற்றப்பட்டது. அனைத்து சடலங் களையும் ஊர்வலமாக கொண்டு செல்வதாக முடிவு எடுக்கப்பட்டது.
அன்றைய இரவு மோடி உயர்அதிகாரிகளைக் கூட்டினார். அதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். உயர்அதிகாரிகளிடம் ஆவேசமாக உரையாற்றிய மோடி, கோபம் கொண்ட மக்களின் செயல் களுக்கு இடைஞ்சல் விளைவிக் கக்கூடாது. அவர்களது நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் பேசிய வெறிப்பேச்சு இனவெறி கொண்ட உயர்அதிகாரிகளை உசுப் பேற்றி வெறிகொள்ளச் செய்தது. சிலர் வெறிகொண்ட மதவெறியர் கள் நினைத்தபடி படுகொலை கள் நடத்தப்படும் என மவுன பார்வையாளர்களாக மாறினார் கள். சிலர் இனவெறியர்களோடு இவர்களும் களத்தில் குதித்தார்கள். இந்த இனவெறி தாண்டவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் கள் கருவறுக்கப்பட்டனர்.
இந்த இனப்படுகொலைகளுக்கு மோடி சம்பவம் நடப்பதற்கு முந்தையநாள் அரசு உயர் அதிகாரிகளுடன் பேசிய வெறி உரைதான் முக்கிய காரண மாக அமைந்தது என மனித உரிமை ஆர்வலர்கள், இனப்படு கொலைகளில் பாதிக்கப்பட்டோர், மற்றும் பாதிக்கப்பட்டோரின் வழக்கறிஞர்கள், நடுநிலை ஊடக வியலாளர்கள் கருத்து தெரிவித் தனர்.
குறிப்பாக ஜன்சங்கர்ஷ் சமிதி அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான முகுல் சின்கா, மோடி உயர் அதிகாரிகளுடன் பேசிய தொலைபேசி உரை யாடல்கள் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும், நீதித்துறை அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி கூட்டிய உயர்அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்ட உரை யாடல்களின் பதிவுகள், வாகனங் களின் பதிவு எண்கள், காவல்துறை குறிப்பேடுகள் போன்றவை அழிக்கப்பட்டதாக அரசு வழக்கறி ஞர் கூறுகிறார். ஆனால் அந்த அதி முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருக்கிறதா? இல்லை யாம் என்பது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என மிக தெளிவான(!) பொறுப்பான பதிலை குஜராத் மாநில புலனாய் வுத்துறை இயக்குநர் சிவானந்த்ஜா செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
குஜராத் மாநில புலனாய்வுத் துறையின் முன்னாள் உயர்அதிகாரி சஞ்சீவ்பட் இனக்கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பதிவுகள் பாதுகாக்கப்பட வேண்டும், என்றும் அந்த கூட்டத்தில் தான் மவுனபார்வையாளராக இருந்ததை யும் குறிப்பிட்டு பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
முக்கிய ஆவணங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை செய்யப் பட்ட நிலையிலும் ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக செய்திகளை வெளியிட்டிருக்கும் குஜராத் அரசின் செயல் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதித்துறையின் முகத்தில் அழுத்தமாகக்கரி பூசிய குஜராத் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஹபிபா பலன்
No comments:
Post a Comment