Thursday, July 7, 2011

தில்ஷன்-காஷ்மீர் முதல் சென்னை வரை

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகே உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பாதாம் கொட்டை பறிக்கச்சென்ற ஏழைச் சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொன்றிருக்கிறார்.

இது சென்னை மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் சென்னையில் மூன்று இடங்களில் ஏராளமான மக்கள் சாலை மறியலும் செய்துள்ளனர்.

8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தில்சான் தனது நண்பர்கள் மூன்று பேருடன் பாதாம் கொட்டை மற்றும் பழங்கள் பொறுக்கச் செல்வது வழக்கம்.
ராணுவ குடியிருப்பு பகுதி அதி முக்கிய பாதுகாப்பு நிறைந்த ஒன்று. எனவே அங்கு அத்துமீறி யாரும் பிரவேசிக்கக்கூடாது என ராணுவத் தரப்பில் கூறப்படுகிறது. அத்துமீறல் என்பது என்ன? யார் அதனை நிகழ்த்துவார்கள்? எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கூட அறியாமல் துப்பாக்கி சூடு நடத்துவது அனைத்து மக்களையும் கொதிப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

ஒரு சிறுவன் அனுமதியில்லாமல் உள்ளே வருகிறான் என்றால் அவனை அழைத்து அல்லது விரட்டிச்சென்று பிடித்து கண்டிக்கலாம். பயமுறுத்தலாம், அதைவிடுத்து உடன டியாக துப்பாக்கி சூடு நடத்துவது ஆணவத்தின் உச்சகட்டம். ஏகாதிபத் திய திமிரின் வெளிப்பாடு. தென்னாட் டவர்களை இழிவாகக் கருதும் வடஇந்திய மனோபாவம். ஏழைகள் என்றால் காட்டப்படும் எகத்தாளம் என்று பல்வேறு முனைகளில் இருந்தும் நாட்டு மக்களின் கோப அலைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அத்துமீறியது குற்றம்; ராணுவ உயர்அதிகாரிகளின் குடியிருப்புகளில் ஏழை ஒடுக்கப்பட்ட சிறுவனின் கால்பட்டால் தீட்டு ஏற்பட்டுவிடுமா? ஒரு சிறுவனை ஓடிச்சென்று பிடித்து கண்டிக்க இயலாதவர்கள், எல்லைப்புறத் தில் எதிரிகளையோ நாட்டில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளையோ எப்படி பிடிக்கப்போகி றார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தலையில் குண்டுபாய்ந்த அந்த அப்பாவி சிறுவனை காப்பாற்றக் கூட முயலாமல் வெறும் இலைதழைகளை வைத்து மூடி செய்த தவறை மறைக்கவும் முயன்றுள்ளனர் பாதகர்கள்.

இந்த நிகழ்வில் தமிழக முதலமைச்சரின் செயல்பாடு ஆறுதலும் நிம்மதியையும் தருகி றது. துணிவும் ஆற்றலும் நிறைந்த அவரது நடவடிக்கைகள் மக்களின் மனதில் நம்பிக்கை யை விதைத்திருக்கிறது.

மத்திய ஆளும் வர்க்கமும் மாநில ஆளும் வர்க்கமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அப்பாவி ஏழை மக்களை கை கழுவி விடுவது தானே வாடிக்கை.

ஆனால் இங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

அடாவடிச் செயலை செய்தது இந்திய வல்லரசின் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவன் என்று தெரிந்திருந்தும் ஏனென்று கேட்க யாருமில்லாத ஏழைச்சிறுவன் தில்சானின் பக்கம் நின்று நியாயம் கேட்ட முதல்வரின் செயல் உடனடியாக தமது அமைச்சரவை சகாக்களை அனுப்பி ஆறுதல் சொல்ல வைத்த செயல், 5 லட்சரூபாய் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை உடனடியாக வழங்கிய வேகம் போன்றவை தான் நடத்துவது மக்களுக்கான அரசு தான் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

மேலும் இந்த வழக்கினை உடனடியாக தமிழக சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டிருக்கிறார். துப்பாக் கியால் சுட்ட ராணுவத்தைச் சேர்ந்தவனை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் ராணுவத்திடம் கேட்டிருக்கிறார்.

இதனைப் போன்ற நிகழ்வு இனி தமிழகத்தில் நடக்கக்கூடாது என அனைவரும் விரும்பும் நிலையில் இவ்வாறான ஒரு சம்பவம் தமிழக அரசே அதனை சகித்துக் கொள்ளாது என்பதை புரிய வேண்டியவர்களுக்கு புரியவைத்தாகிவிட்டது.

ஆனால் தமிழகத்தில் இதே போன்று சம்பவம் நடப்பது இதுவே முதன் முறையாக இருக்கக்கூடும். ஆனால் ராணுவ வீரர்களில் சில கருங்காலிகள் அத்துமீறி அப்பாவி இளைஞர்களை, சிறுவர்களை காக்கா குருவிகளைப் போல சுடுவது அனுதினமும் ஜம்மு காஷ்மீரிலும், இந்தியாவின் கிழக்கு மாகாணங்களிலும் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தங்கள் தோட்டத்தை பார்வையிடச் சென்ற இரண்டு இளம் பெண்களை காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி படுகொலை செய்து ஓடையிலும் வீசினர். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் பற்றி எரிந்தது.
நிராயுதபாணிகளாக வீதிக்கு வந்த அப்பாவி காஷ்மீர் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு தங்கள் இன்னுயிரை இழந்தனர். இதனால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பில் ஆழ்ந்தது.

இதுவரை அந்தக் கொடும்செயலை இழைத்த வர்கள் தண்டிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் அதுபோன்ற செயல்கள் மணிப்பூரிலும் மற்றும் சில கிழக்கு எல்லைப்புற மாகாணங்களில் நடந்த வண்ணம் உள்ளன.

எனவே சென்னை சம்பவத்தில் நேர்மையான நீதி விசாரணை மேற்கொள்ளப்படுவதோடு இதுபோன்ற செயல்களுக்கு குரல் கொடுக்க நாட்டு மக்கள் தயங்கக்கூடாது.

http://www.tmmk.info/

No comments:

Post a Comment