Tuesday, July 19, 2011

உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய டோணியின் பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம்

லண்டன்: உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேப்டன் டோணி பிரமாதமாக ஆடி ரன் குவித்து, இந்தியா கோப்பையை வெல்ல உதவிய அவரது பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.

ஒரு அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த பேட்டை வைத்துத்தான் இலங்கைக்கு எதிராக ஏப்ரல் மாதத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார் டோணி.

இந்த பேட் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்திய மதிப்பில் ரூ. 72 லட்சத்துக்கு பேட் ஏலம் போனது.

இதே ஏலத்தில் டோணி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில், உலகப் புகழ் பெற்ற கலைஞர் சச்சா ஜாப்ரி உருவாக்கிய கலைப்படைப்பும் ஏலத்தில் விடப்பட்டது.

அதேபோல 3இடியட்ஸ் படத்தின் ஒரிஜினர் கதைப் புத்தகத்தையும் ஏலம் விட்டனர்.

வின்னிங் வேஸ் டுடே பார் டுமாரோ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார் டோணி. அதற்கு நிதி சேகரிப்பதற்காகவே இந்த ஏலம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் டோணி பேசுகையில், கடந்த மார்ச் மாதமே இந்த அறக்கட்டளை இந்தியாவில் தொடங்கப்பட்டு விட்டது. சமூக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், சிறார்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றார் டோணி.
Thatstamil

No comments:

Post a Comment