Sunday, July 17, 2011

மனித உடற்கூறுகளைத் துல்லியமாக காட்டும் கூகிளின் Body Browser சேவை

மனித உடற்கூறுகளைத் துல்லியமாக காட்டும் கூகிளின் Body Browser சேவை

பள்ளியில் படிக்கும் காலத்தில் அறிவியலில் மனித உடல் உறுப்புகளை மாதிரிக்குக் காட்ட களிமண்ணால் செய்யப்பட்ட மாதிரிகளாக வைத்திருப்பார்கள். இதயம், நுரையீரல், கல்லீரல், குடல் அமைப்பு என தனித்தனியாகவும், எலும்புக்கூடும் வைத்து பாடம் நடத்துவார்கள். மற்றபடி உண்மையாக உடற்கூறுகளைப் பார்ப்பது மருத்துவர்களாலே முடியும். இதைக் கருத்தில் கொண்டு கூகிள் உருவாக்கியிருக்கும் சேவை தான் Google Body Browser.
கூகிள் தற்போது இதனை சோதனை முயற்சியாக Google labs மூலம் உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் மனித உடற்கூறுகளை 3D என்று சொல்லப்படும் உயர்தர தொழில்நுட்பத்தில் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். உடலின் குறிப்பிட்ட பாகத்தை மட்டும் பெரிதாக்கியும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. மேலும் எந்த பாகம் வேண்டுமானாலும் அது ஒரு வகை உடலின் எழும்பாக இருந்தாலும் தேடிப் பார்த்துக் கொள்ளக் கூடிய வசதியும் கொடுத்திருக்கிறார்கள்.
இதனை கூகிள் எர்த் மென்பொருள் போல நிறுவி பார்க்க முடியாது. இணைய உலவியில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த சேவையை WebGL என்ற நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளதால் Webgl வசதி இருக்கும் உலவிகளான Chrome, Firefox போன்ற உலவிகளின் புதிய பதிப்பில் தான் பார்க்க முடியும்.
கூகிள் மேலும் பலவகையான நோய்களைப் பற்றியும் உடம்பின் பிரச்சினைகளைப் பற்றியும் குறிப்புகளைச் சேர்க்கவிருப்பதாக கூறியுள்ளது.இந்த சேவை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி செய்பவர்கள், மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இணையதள முகவரி: http://bodybrowser.googlelabs.com/

No comments:

Post a Comment