Wednesday, May 25, 2011

27ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு-ஜெ. அறிவிப்பு-தட்ஸ்தமிழில் காணலாம்

சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 9 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் நிலவி வந்தது. இந்த நிலையி்ல்தேர்வு முடிவுகளை வருகிற 27ம் தேதி வெளியிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகியவற்றை 27.5.2011 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியிட ஆணையிட்டுள்ளார்.

இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 27.5.2011 அன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாணவ- மாணவியர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாகவும், இணைய தளங்கள் மற்றும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும், தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில நிமிடங்களில் அவை இணையதளங்களில் வெளியிடப்படும்.

எஸ்எஸ்எல்சி உள்ளிட்ட தேர்வு முடிவுகளை உடனுக்குடன் வெளியிட உங்கள் தட்ஸ்தமிழ் ஏற்பாடு செய்துள்ளது. காலை 9 மணிக்குப் பிறகு தட்ஸ்தமிழில் ரிசல்ட் வெளியாகும்.

No comments:

Post a Comment