Wednesday, May 11, 2011

கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

சமுதாய சிந்தனையும், கொள்கை உறுதியும் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

உங்கள் திறமைகளை பட்டை தீட்டிக்கொள்ளவும், சமூக மார்க்க விஷயங்களைப் பற்றி புரிதலை ஏற்படுத்தவும் இன்ஷா அல்லாஹ் ஜூன் மாதம் (நான்கு நாட்கள்) தமுமுக சார்பில் குளுகுளு மலைப்பிரதேசம் ஒன்றில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.


+2 வகுப்பு முடித்தவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டும் இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

முகாம் நடைபெறும் தேதி இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்கள் விபரங்களை வெள்ளைத் தாளில் எழுதி உங்கள் பகுதி தமுமுக நிர்வாகிகளிடம் பரிந்துரை பெற்று கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முத-லில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பங்களை tmmk@tmmk.in This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it   என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

முகவரி

மாணவரணி சிறப்புப் பயிற்சி முகாம் 2011

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

7, வடமரைக்காயர் தெரு, சென்னை-1.


No comments:

Post a Comment