10 May 2011
டெஹ்ரான்:உடல்நிலை பாதிக்கப்பட்ட அல்காயிதா போராளி இயக்க தலைவர் உஸாமா பின்லேடன் முன்பே இறந்துவிட்டார் என்ற நம்பத்தகுந்த தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் ஹைதர் முஸ்லஹி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அப்போட்டாபாத்தில் நடந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் உஸாமா கொல்லப்பட்டார் என்ற செய்தியை அவர் நிராகரித்தார்.அமெரிக்கா உஸாமாவை கொலைச்செய்திருந்தால் அவருடைய இறந்த உடலை பகிரங்கப்படுத்தாதது ஏன்? என ஹைதர் கேள்வி எழுப்புகிறார்.
உஸாமாவின் உடலை கடலில் வீசியது ஏன்?என்பது குறித்து அமெரிக்கா விளக்கமளிக்கவேண்டும்.முன்னாள் ஜுன்ந்துல்லா தலைவர் அப்துல் மாலிக்கை ஈரான் கைது செய்தபோது அவருடைய பேட்டி அடங்கிய வீடியோவை வெளியிட்டதை ஹைதர் முஸ்லஹி நினைவுக்கூறினார்.
உள்நாட்டு பிரச்சனைகளிலிருந்தும்,அமெரிக்காவின் பொருளாதார நிலைமை மோசமடைந்துவருவதிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்ப ஒபாமா அரசின் முயற்சிதான் உஸாமாவின் படுகொலை என ஹைதர் தெரிவிக்கிறார்.
Tnks toothu
No comments:
Post a Comment