Saturday, May 28, 2011

லிபியா மீதான நேட்டோவின் தாக்குதல் போக்குற்றம் கடாபி மனைவி



லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் மனைவி சோபியா கடாபியின் பேட்டி ஒன்றை சி.என்.என் வெளியிட்டுள்ளது. லிபியாவில் கடாபிக்கு எதிராக 40 நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதலை நடாத்துகின்றன. இதனால் பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். லிபிய மக்களே எமது பிள்ளைகளாகும், அவர்கள் கொல்லப்படுவதால் பெற்றோர் போல நாம் பெரும் கவலையடைகிறோம். நேட்டோ பொது மக்கள் மீது நடாத்தும் தாக்குதல் போர்க்குற்றச் செயலாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது தாம் தற்போது தமது மாளிகையில் இல்லை என்றும், தேவையற்று அங்கு தாக்குதல் நடாத்தப்படுகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறும்போது தாம் வாழ்வதாக இருந்தாலும், சாவதாக இருந்தாலும் தமது மாளிகையிலேயே வாழ்ந்து சாக விரும்புவதாக தெரிவித்தார். கடந்த மே 1ம் திகதி இவருடைய இளைய மகனும், 3 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்ட நிகழ்வையும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு வாழ்க்கை அர்த்தமற்றுப் போயுள்ளது. உண்மை ஒரு நாள் வெளிவரும், இறுதி வெற்றியை கடவுள் நமக்குத் தருவார் என்றும் கூறியுள்ளார்.

alaikal

No comments:

Post a Comment