திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டீஸ் என்ற உயர்கல்வி நிலையத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
M.Phil. (Applied Economics) படிப்புக்கு Economics / Social Sciences / Humanities / Law பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Sciences / Technology / Life Sciences HKM பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஓபிசி (என்சிஎல்) பிரிவினருக்கு அரசு விதிப்படி இடஒதுக்கீடு உண்டு.
Ph.D. Programme in Economics Agriculture, Economic History, Gender - Development, Health, Poverty, Industry - Technology, Labour - Employment, Population Studies, Trade and Macro economics ஆகிய பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம்.
பொருளியல் அல்லது அது சார்ந்த பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன், அதே பாடப்பிரிவில் எம்பில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்புகளுக்கு கல்வித்தகுதி, ஆராய்ச்சித்திறன் அடிப்படையில் விண்ணப்பங்களை பரிசீலித்து எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். எம்பில் மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், பிஎச்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும்.
இது குறித்த விபரங்களை www.cds.edu என்ற இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.
Tnks Dinamani
No comments:
Post a Comment