Wednesday, May 11, 2011

மறுமையின் பெயரால் வெற்றி பெற்றிருக்கிறார் ஒசாமா



ல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். உலகெங்கும் அதற்கு ஆதரவு வலுத்து வரும் வேளையில், அவருக்காக தொழுகை நடத் தியிருக்கிறது அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையம்.
‘அமெரிக்கர்களின் உடல் சிதறி சின்னாபின்னமாகும்போது நான் அல்லாவுக்கு நன்றி செலுத்துகிறேன். போரிடுதல் என்பது எங்கள் ஜரியத்தின் ஒரு பகுதி. அல்லாவை  நேசிப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள்’- 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11 அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலின் போது ஒசாமா பின்லேடன் உதிர்த்த வார்த்தைகள்  இவை.

அந்தத் தாக்குதலுக்குப் பின்னர்தான் அவரை தீவிரமாகத் தேடத்
தொடங்கியது அமெரிக்கா. கடந்த வாரம் பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா  அறிவித்தது.

பின்லேடன் மறைவுக்கு கண்டனம் தெரிவித்து உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நடத்தும் சிறப்புத் தொழுகைகள் பெருத்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சென் னை அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் இஸ்லாமிய மையத்தில் கடந்த வாரம் பின்லேடன் மறைவுக்காக நடத்தப்பட்ட ஷனாஜா எனப்படும் சிறப்புத் தொழுகை  உளவுத்துறை அதிகாரிகள் வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. மக்கா மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாம் சம்சுதீன் காசிமியை சந்தித்துப் பேசினோம்.

உலகெங்கிலும் பயங்கரவாதத்தைத் தோற்றுவித்த  பின்லேடனுக்கு நீங்கள் ஜனாஷா நடத்தியது சரிதானா?
“உலகில் எந்தவொரு இஸ்லாமியனுக்கு இந்த கதி ஏற்பட்டிருந்தாலும் நாங்கள் தொழுகை நடத்தியிருப்போம். எங்களின் இந்தக் கடமையைக் கூடச் செய்யவிடாமல் அவரை  நாய் மாதிரி கடலில் தூக்கிப் போட்டு விட்டது அமெரிக்கா. அவர் ஒன்றும் அனாதையல்ல. அவரை பயங்கரவாதியாகச் சித்திரித்து ஊடகப் பிரசாரங்கள் வலுவாக இருந்த  நிலையில், அவரது மரணம் கூட எங்கள் மக்கள் மத்தியில் மயான அமைதியை ஏற்படுத்தியது.

ஜனாஷா நடத்தினால் நம்மையும் அல்கொய்தா ஏஜெண்ட் என்று சொல்லிவிடுவார்கள் எனப் பயந்தனர். அந்த மௌனத்தை நாங்கள் கலைத்தோம். அவ்வளவுதான்.  ஒசாமா பயங்கரவாதி அல்ல.’’

அப்படியானால் 2001-ம் ஆண்டு அமெரிக்க வர்த்தக மையத் தாக்குதலை ஒசாமா நடத்தவில்லை என்கிறீர்களா?
“இரட்டைக் கோபுரத் தாக்குதல் வழக்கில் ஒசாமா சம்பந்தப்பட்டிருந்தார் என அமெரிக்கா இதுவரை எந்தவொரு ஆதாரத்தையும் காட்டவில்லை. ஒசாமா அந்த வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டவர்தானே தவிர, குற்றவாளி அல்ல. அமெரிக்கா நடத்தும் பயங்கரவாதத்திற்கு இந்தத் தாக்குதல் சரியானதுதான் என கியூபா அதிபர் ஃபிடல் காஸ் ட்ரோவும் அப்போது கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஈராக்கில் இல்லாத அணுகுண்டைத் தேடுகிறோம் என்ற பெயரில் ஐம்பது லட்சம் குழந்தைகள் அனாதை ஆக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அமெரிக்காவால் படு கொலை செய்யப்பட்டனர். இது பயங்கரவாதம் இல்லையா? ஆப்கனில் ஒசாமாவைத் தேடுகிறோம் என்ற பெயரில் சிவிலியன்கள் மீது 118 முறை அமெரிக்கா குண்டு  வீசியுள்ளது. பல்லாயிரம் பேர் இறந்தார்கள். இதற்கு யாரிடம் போய் நியாயம் கேட்பது?
போபால் விஷவாயுவுக்குக் காரணமான ஆண்டர்சனை இன்று வரை அமெரிக்கா நம்மிடம் ஒப்படைக்கவில்லை. ஒருமுறை ஒசாமா பேசிய பேச்சு அல்ஜசீராவில்  ஒளிபரப்பானது. எனக்கு அரபி தெரியும் என்பதால் பார்த்தேன். அதில், ‘முஸ்லிம் சமூகம் தூங்கிக் கொண்டிருக்கிறது. நமக்கு எதிராக மாபெரும் சூழ்ச்சி நடந்து கொண் டிருக்கிறது’ என அவர் பேசிய பேச்சை கீழே மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். எப்படித் தெரியுமா?

‘அமெரிக்காவை அடுத்து எங்கள் குறி இந்தியாதான்’ என  ஒளிபரப்பானது. இது தேவையில்லாமல் எங்களை மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த அமெரிக்கா செய்யும் சூழ்ச்சி வலை. அவர்கள் எங்களை நசுக்கப்  பார்க்கிறார்கள்.’’

‘இறைவனால் உருவாக்கப்பட்ட எந்த உயிரையும் நியாயமின்றி பறிக்காதீர்கள்’ என இஸ்லாம் சொல்கிறது. அமெரிக்கத் தாக்குதலில் பல்லாயிரம் அப்பாவி மக்கள் கொல் லப்பட்டார்களே? இது நியாயமா?
“ஒசாமாவைப் பொறுத்தவரை அவர் மேற்கத்திய நாடுகளின் மீது மிகுந்த கோபத்தில் இருந்தார். அமெரிக்காவின் செய்கைக்கு பிற மேற்கத்திய நாடுகளும் ஆதரவு தெரிவி த்தன. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அவர் எந்த நேரத்திலும் பொறுப்பேற்கவில்லை. அவர்தான் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. குர்ஆன் சொல் கிறது, ‘அநியாயம் எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேளுங்கள்’. ஒசாமா அதைத்தான் செய்தார்.



ஒசாமா குற்றவாளி என்று அமெரிக்கா சொல்வதை நாங்கள் நம்பத் தயாரில்லை. அப்பாவி மக்களை அவர் கொன்றார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? மும்பைத்  தாக்குதலுக்குக் காரணமான கசாப்பை பிடித்தவுடன் சுட்டுக் கொன்றிருக்க முடியும். ஆனால், முறையான விசாரணையை இந்தியா கடைப்பிடிக்கிறது.

உண்மையைச் சொன்னால் ஒசாமா இறந்து இரண்டு வருடங்களாகி விட்டது. அடுத்த வருஷம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அதற்காகத்தான் இந்த நாடகம்.  வெட்கங்கெட்ட நாடான பாகிஸ்தானும் இந்த நாடகத்தில் பங்கெடுத்து இருக்கிறது. அவர் இறந்த படத்தை ஏன் இதுவரை வெளியிடவில்லை? அமெரிக்க அதிபர்  ஒபாமாவும் முஸ்லிம்தான். ஆனால், அவர் இதுவரை தன்னை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர் இறந்தால் நாங்கள் ஜனாஷா நடத்த மாட்டோம்.’’

அப்படியே பார்த்தாலும் இரங்கல் கூட்டம் மற்ற சமூக மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தாதா? 
‘‘இது எங்கள் மக்களின் கடமைகளில் ஒன்று. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கே முதல்வர் கருணாநிதி  இரங்கல் செய்தி வாசிக்கும்போது, நாங்கள் ஒசாமா பின்லேடனுக்கு வாசிக்கக் கூடாதா?’’

இதற்கு மற்ற இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவு கிடைத்ததா?
“எங்கள் சிறப்புத் தொழுகைக்கு த.மு.மு.க., முஸ்லிம் லீக், எஸ்.டி.பி.ஐ. உள்பட அனைத்து அமைப்புகளும் வந்திருந்தன. எல்லாருடைய ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது.

‘மறுமையின் பெயரால் வெற்றி பெற்றிருக்கிறார் ஒசாமா’ என வாழ்த்துச் சுவரொட்டி ஒட்டினோம். அவருக்காக சிறப்புத் தொழுகை நடத்தி முடித்தோம். எங்கள் கடமை இ த்துடன் முடிந்து விட்டது. ஆனால் ஒசாமாவுக்குப் பிறகு அமெரிக்காவைத் தட்டிக் கேட்பது யார்? என்ற ஆதங்கம் மட்டும் எங்கள் மக்கள் மத்தியில் இன்னமும்  தொடர்கிறது’’ என்றார் தலைமை இமாம் சம்சுதீன் காசிமி.

படங்கள்: கணேஷ்
 ஆ.விஜயானந்த்

No comments:

Post a Comment