Wednesday, May 18, 2011

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கவனத்திற்கு....


கடந்த மே மாதம் 13, 2011 – தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க இயலாத ஒரு நாள் என்றால் அது மிகையில்லை. பணபலம், மத்திய மாநில அரசுகளின் செல்வாக்குகள், மீடியா பலம், அரசு பணியார்களின் ஒட்டுமொத்த ஆதரவு என்று அசுர பலத்துடன் காட்சியளித்த திராவிட முன்னேற்றக்கழத்தின் ஆட்சியை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பிய நாள்.

தமிழகம் ஒளிர்கிறது என்று திரு.கருணாநிதி அவர்கள் என்னாதான் கூப்பாடு போட்டாலும் அவரது கட்சியினர் செய்த அராஜகங்கள், ஊழல்கள், விலைவாசி உயர்வு, மின்வெட்டு என்று மக்களை பாதித்த விஷயங்களுக்காக மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்கட்சியாக இருந்த அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்துள்ளனர் என்பதே உண்மை.

இதில் முஸ்லிம் சமுதாயத்தின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினரின் தன்னலம் கருதாத உழைப்பு கூட்டணி கட்சியினரே பாராட்டும் அளவுக்கு இருந்துள்ளது என்பதை எவரும் மறக்கவியலாது.அராஜகத்தையும் வன்முறையையும் ஒழித்து சட்ட ஒழுங்கை சரிவர நிலைநாட்ட வேண்டும்,

ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்பதற்காகவும், மாநிலத்தில் அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டும் என்பதற்காகவுமே கட்சி, மதம், இனம், ஜாதி வேறுபாடுகளின்றி அனைத்துத் தரப்பு மக்களும் அதிமுக அணிக்கு வாக்களித்து இமாலய வெற்றியை அளித்துள்ளனர் என்பதை மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியேற்றுள்ள ஜெயலலிதா அம்மையார் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த காலங்களில் ஜெயலலிதா அம்மையாரின் அரசியல் வாழ்க்கை திரு. கருணாநிதிக்கு மாற்று உருவமாகத்தான் இருந்தது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. திமுக 5 ஆண்டுகள் பதவியேற்று தங்கள் வியாபாரத்தை நடத்தும் என்றால் அடுத்துவரும் அதிமுகவும் அதே பாணியில் மக்களை சுரண்டி ஊழலை நடத்தும் என்ற நிலைதான் இதுவரை இருந்துள்ளது.
ஜெயலலிதாவும் கருணாநிதியும் இவ்விஷயத்தில் ஒத்த நிலையில்தான் இருந்துள்ளனர். எனவே இந்நிலையிலிருந்து ஜெயலலிதா அம்மையார் இந்தமுறை மாறியாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் தமது பதிவயேற்பு நிகழ்ச்சிக்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையாளன் நரேந்திர மோடியை அழைத்துள்ளது தமிழக மக்களில் நடுநிலையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் முகம்சுளிக்க வைத்துள்ளது.
ஜெயலலிதா அம்மையார் தான் பழையபடி நரேந்திர மோடியின் அன்புச் சகோதரியாகத்தான் இருப்பேன் என்ற நிலையை எடுத்தால், இன்று கருணாநிதியும் அவருடைய கட்சியும் எந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதோ இதைவிட மோசமானதொரு நிலையை வருங்காலத்தில் அதிமுக நிச்சயமாக அடையநேரிடும் என்பதை ஒரு எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.
சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு எத்தனையோ தகுதிமிக்க பிரமுகர்கள் நாட்டில் இருந்தும் நரேந்திரமோடியை அழைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஒருவேளை ஜெயலலிதா அம்மையாரின் இந்த முடிவிற்கு குருமூர்த்தி, துக்ளக் சோ போன்ற பார்ப்பன துவேஷக்காரர்களின் திட்டமிட்ட சதியாக இருக்கமோ என்று அரசியல் நோக்கர்கள் சந்தேகிக்கின்றனர்.
முதலில் சங்பரிவார தீயசத்தியான நரேந்திரமோடி யார் என்பதை ஜெயலலிதா அம்மையார் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் அவரது நேரடி கட்டளையின் பேரில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா?
டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின் கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.
குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவற்றை ஜெயலலிதா மறந்தாலும் மறக்கலாம் ஆனால் முஸ்லிம்கள் எவரும் மறக்க தயாரில்லை.
கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்த நரேந்திர மோடி என்ற பயங்கரவாதிக்கு அம்மையார் இனியும் முக்கியத்துவம் கொடுத்தால் தமிழக மக்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே தக்க பாடத்தை அளித்துவிடுவார்கள் என்தை ஜெயலலிதா கவனத்தில் கொள்ளட்டும்.
இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடு சங்பரிவாரங்கள், நரந்திர மோடியின் கூலிப்படையினர் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று ஜெயலலிதா அம்மையாருக்கு விளங்காதா? இவ்வாறு நரந்திர மோடியின் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.
ஊர் பெயர்கலவரம் நடந்த ஆண்டுகொல்லப்பட்ட முஸ்லிம்கள் / சூறையாடப்பட்ட முஸ்லிம்கள்
மொராதாபாத்1980142 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
சூரத்1982100 முஸ்லிம்கள் / 25 கோடிக்கு மேல்
மீரட்1983கணக்கிடப்படவில்லை
பீகார்198125 முஸ்லிம்கள் / 5 கோடிக்கு மேல்
பூனை198230 முஸ்லிம்கள் / 3 கோடிக்கு மேல்
அஹ்மதாபாத்198230 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்
நெல்லி, அஸ்ஸாம்19832191 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
மீரட்1987130 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
பாகல்பூர்19891000 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்
பரோடா1990600 முஸ்லிம்கள் / 10 கோடிக்கு மேல்
அயோத்தி1992300 வீடுகள் மற்றும் பள்ளிவாயில்கள்
போபால்1992141 முஸ்லிம்கள் / 26 கோடிக்கு மேல்
சூரத்199230 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
கோயம்புத்தூர்199719 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
கான்பூர்2001100 கோடிக்கு மேல் சூறையாடப்பட்டன
குஜராத்2002-2003ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிடமுடியாத அளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இவ்வாறு இந்தியத்திருநாடு நரந்திர மோடியின் இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தனது பதவியேற்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை ஜெயலலிதா அழைப்பது முறைதானா? மோடியின் வகையறாக்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல்
வருடம்கலவரங்கள்இறந்தவர்கள்
2003711193
2004672134
2005779124
2006693133
200719123
கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக ஜெயலிலதா இருந்தால் மோடியும் ஜெயலிலதாவும் சமமானவர்கள்தான் என்ற நிலையாட்டை தமிழக முஸ்லிம்கள் எடுக்க நேரிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இனி பிஜேபி யுடன் எக்காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்று கடந்த 1997ல் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்துள்ள ஜெயலலிதா அவர்கள் மேற்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமது கட்சியின் இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முஸ்லிம்கள், மற்றும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்கள் முக்கியமா அல்லது நடந்த சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த சங்பரிவார பிஜேபி முக்கியமா என்பதை ஜெயலலிதா அம்மையார்தான் முடிவெடுக்க வேண்டும்.


 
 
sahulDubai
+971504753730

No comments:

Post a Comment