Saturday, May 28, 2011

ருவாண்டா இன அழிப்புடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி கைது




ருவாண்டாவில் இன அழிப்பு மற்றும் டூட்சி இனப் பெண்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்துவதற்காக தனி குழுக்களை அமைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த பிரதான சூத்திரதாரி பேர்னாட் முன்யாகிசாரி கொங்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஹூட்டு எனப்படும் பெரும்பாலும் ஆபிரிக்காவின் ருவாண்டா மற்றும் புரூண்டி நாட்டில் வாழும் இனக்குழுவைச் சேர்ந்தவர். பேர்னாட் முன்யாகிசாரி இண்டர்ஹெம்வேஎனப்படும் ஹூட்டு இராணுவத்தில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்த 1994 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலே ருவாண்டா இனப்படுகொலை இடம்பெற்றது.
அக்காலப்பகுதியில் டூட்சி மற்றும் ஹூட்டு இனத்தவர்கள் உட்பட சுமார் 800 000 பேர் கொல்லப்பட்டனர். பலர் ஊனமாக்கப்பட்டனர்.
சுமார் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கூடிய விரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நிறுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Alaikal

No comments:

Post a Comment