Tuesday, March 29, 2011

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!


லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

  8/8  


லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
நேட்டோ படைகளின் சீறும் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலின் நீரைக் கொதிநிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றன. உலக ரவுடியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் தலைமையில் நேட்டோ படைகள் லிபியாவின் தலைநகர் திரிப்போலியின் மேல் குண்டு வீச்சு நடத்தி வருகின்றன. அதில் வழக்கம் போல அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக லிபியாவின் சர்வாதிகாரியாய் இருந்து வரும் முவாம்மர் கடாஃபியை எதிர்த்து ஜனநாயகத்துக்காகப் போராடி வரும் ஜனநாயக வீரர்களுக்கு உதவும் பொருட்டு ‘மனிதாபமானத்தின்’ அடிப்படையில் தான் தாங்கள் இந்தத் தாக்குதலைத் துவங்கியதாக நேட்டோ நாடுகள் அறிவித்துள்ளன.
அமெரிக்க மனிதாபிமானத்தின் கந்தக நெடியை லிபியர்களுக்குப் பரிசளிக்கும் விதமாய்க் கடந்த 19-ஆம் தேதி நேட்டோ நாடுகளின் நாசகாரிக் கப்பல்களில் இருந்து லிபியாவை நோக்கி நூற்றுக்கணக்கான தொமொஹாக் ஏவுகணைகள் பறந்து சென்றன. சரியாக எட்டு ஆண்டுகளுக்கு முன் – 2003-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி – இதே போன்றதொரு மனிதாபிமானத்தின் செய்தியை ஈராக்கியர்களுக்குச் சொன்னான் வெள்ளைத் தோல் ஒபாமாவான ஜார்ஜ் புஷ். லட்சக்கணக்கான மக்கள் மாண்டு போயும், உடல் உறுப்புக்களை இழந்தும் கூட இன்று வரை பணியாமல் நின்று புதைகுழி என்பது எப்படியிருக்கும் என்று அமெரிக்கர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார்கள் பண்டைய பாபிலோனியாவின் வீரம் செரிந்த அந்த மக்கள்.

அரபுலகின் எழுச்சியும் அமெரிக்க நலனும்!

இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் ஆவி அடங்கும் முன்பாகவே கருப்புத் தோல் ஜார்ஜ் புஷ்ஷான ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார். இந்தப் போரில் அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல்களும், எப்-16 விமானங்களும், தொமொஹாக் ஏவுகணைகளும் என்னென்ன வேலைகளைச் செய்யுமோ அதே வேலைகளை சர்வதேச அளவிலான முதலாளித்துவ ஊடகங்களும் செய்து வருகின்றன. கடாஃபியை எதிர்த்து நடந்து வரும் மக்கள் புரட்சியை அவர் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டு ஒடுக்கி வருவதாகவும், மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று வருவதாகவும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை கடந்த சில வாரங்களாகவே மிகத் தீவிரமாக உலகெங்கும் பரப்பி வருகின்றன.
முதலில் இப்போது லிபியாவில் கடாஃபிக்கு எழுந்துள்ள எதிர்ப்பு என்பது பிற அரபு நாடுகளில் உண்டான எதிர்ப்பில் இருந்து சாராம்சத்திலேயே வேறுபட்டது. அதைப் பற்றி விரிவாகப் பார்க்கும் முன், ‘வண்ணப் புரட்சிகள்’ என்று மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களால் சித்தரிக்கப்படும் அரபு தேசங்களில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளுக்கும் லிபியாவில் நடந்து வரும் போராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்வது அவசியம்.
மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணை வளம் அறியப்பட்ட துவக்க ஆண்டுகளிலேயே அந்நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் போட்டியின்றி அதன் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ளவும்  ஏகாதிபத்திய நாடுகளிடையே நாய்ச்சண்டை ஆரம்பித்து விட்டது. ஐம்பதுகளுக்குப் பின் இரண்டாம் உலகப் போரினால் கடுமையாக பலவீனமடைந்திருந்த பிற ஏகாதிபத்தியங்களைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்திருந்ததால், இப்பிராந்தியத்தின் அரபு தேசங்களை மற்றவர்களுக்கு முன் முந்திக்கொண்டு சுலபமாக வளைத்துக் கொண்டது. மத்திய கிழக்கின்  பெரும்பாலான அரபு தேசங்களில் பெயரளவுக்கு ஒரு பொம்மை சர்வாதிகாரியை வைத்துக் கொண்டு அவற்றை தமது மறைமுகக் காலனிகளாக கட்டியாள்கிறது அமெரிக்கா. வளைகுடா எண்ணை வர்த்தகம் முழுவதையும் கட்டுப்படுத்துவது ஆங்கிலோ அமெரிக்கப் பன்னாட்டு எண்ணைக் கம்பெனிகள் தாம்.
இந்நிலையில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்த நிலையில், சமீப வருடங்களாக உலகெங்கும் ஒரு பொதுப் போக்காக இருக்கும் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் மக்களிடையே சர்வாதிகாரத்திற்கான எதிர்ப்புணர்வு உருவாகியுள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தும்  சிறியதும் பெரியதுமான போராட்டங்களாக முளைவிடத் துவங்கியது.
பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான இப்போராட்டங்கள், அரசுக்கு எதிரான போராட்டமாக கொஞ்சம் கொஞ்சமாக பரிணமித்து வந்த நிலையில், இதன் காரணமாக தனது மேலாதிக்கத்திற்கு எந்தவிதமான சவாலும் உருவெடுத்து விடக் கூடாது என்பதில் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தியது. தொடர்ந்த போராட்டங்களின் மைய்யமாக மக்களை வாட்டி வதைக்கு மறுகாலனியாதிக்கத்திற்கான எதிர்ப்பாக இல்லாமல், ஜனநாயகம், பலகட்சி ஆட்சி முறை  போன்ற சில சில்லறை முதலாளித்துவச் சீர்திருத்தக் கோரிக்கைகளைச் சுற்றியே அமைந்தது. இது எதார்த்தத்தில் வெறுமனே சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே சுருங்கிப் போனது. அதாவது வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு முதலான பிரச்சினை காரணமாக எழுந்த எதிர்ப்புணர்வு பின்னர் வெறும் ஆட்சியாளரை மாற்றும் போராட்டமாக மட்டும் மாறிப்போனது. இந்த போராட்டங்களில் உழைக்கும் மக்கள் வெகுவாக அணிதிரண்டாலும் அவர்களை வழிநடத்தியது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த அறிவுஜீவிகள்தான்.
எகிப்திலும், துனீசியாவிலும் ஏற்பட்டிருக்கும் ‘மாற்றம்’ வெறுமனே ஆட்சியாளர்களின் பெயர் மாற்றம் மட்டும் தான் – பென் அலிக்கு பதிலாக பதவிக்கு வந்துள்ள முகம்மது கன்னோசி ஆகட்டும்; எகிப்தில் முபாரக்கை அடுத்து அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் இராணுவமாகட்டும் – இவர்களுக்குள் கொள்கையளவில் எந்த வேறுபாடும் கிடையாது. துனீசியாவின் முகம்மது கன்னோசியும் அவரது கூட்டாளிகளும் இவர்களைத் தாங்கி நிற்கும் இராணுவமும் அமெரிக்க அடிவருடிகள் தான். அதே போல் எகிப்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும்  இராணுவமும் அமெரிக்க ஆதரவு இராணுவம் தான். இந்நாடுகளில் தன்னெழுச்சியாகத் துவங்கிய மக்கள் போராட்டங்களின் திசைவழி இன்னதென்பதை  அமெரிக்காவே தீர்மானிப்பதாகவே அமைந்தது.
இப்படியாக, எகிப்து மற்றும் துனீசியாவில் நடந்த மக்கள் எழுச்சி ஆயுதம் தாங்கிய போராட்டமாக அல்லாமல் அமைதியான வழியிலேயே நடத்தப்பட்டன. மேலும், போராட்டக்காரர்களுக்கு அயல் நாடுகளில் இருந்து ஆயுத உதவியோ இராணுவ உதவியோ வழங்கப்படவில்லை. எகிப்தின் பல்வேறு நகரங்களின் கட்டுப்பாடுகளை முபாரக் இழந்து கொண்டிருந்த சமயத்தில் பிற நாடுகள் எதுவும் போராட்டக்காரர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது தூதர்களை அனுப்பி வைக்கவில்லை, இப்போது பஹ்ரைனில் அரச எதிர்ப்பாளர்களை இராணுவம் மிருகத்தனமாக ஒடுக்கிக் கொண்டிருக்கும் போதும் அம்மக்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கவில்லை – ஆனால், இது அனைத்தும் லிபியாவில் நடந்து கொண்டிருக்கிறது. மட்டுமல்லாமல், லிபியாவில்  கடாஃபியை எதிர்த்த போராட்டங்கள் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்பிருந்தே அதன் மீது இராணுவ நடவடிக்கை ஒன்றிற்கான தயாரிப்புகளில் அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஈடுபட்டிருந்தன.
லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
ஒபாமா - கடாஃபி

லிபியாவில் நடப்பது ஜனநாயகத்திற்கான போராட்டமா? அமெரிக்காவின் ஐந்தாம் படை வேலையா?

மக்களுக்கான ஜனநாயகத்தை கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக முவாம்மர் கடாஃபி மறுத்து வந்ததும், தனக்கு எதிரான போராட்டங்களை அவர் ஒடுக்கி வந்ததும், இவற்றின் காரணமாக லிபியாவில் ஜனநாயகத்திற்கான கோரிக்கை இருந்து வந்ததும் எந்தளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை தான் இன்று மேற்கத்திய ஊடகங்களால் ஜனநாயகத்தைக் காக்க வந்த ‘புரட்சியாளர்கள்’ என்பது போல சித்தரிக்கப்படும் போராட்டக்காரர்கள் உண்மையில் அமெரிக்கத் தயாரிப்புகள் என்பதும்.
லிபியாவின் ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் – முவாம்மர் கடாஃபியை பதவி விலக்கம் செய்யவும், அமெரிக்கா எந்த விதமான உதவியையும் செய்யத் தயார் என்றும், லிபியப் புரட்சியாளர்களோடு அமெரிக்கா தொடர்பு கொண்டு வருகிறது என்று ஹிலாரி கிளிண்டன் பிப்ரவரி 27-ஆம் தேதி அறிவித்துள்ளார். லிபியாவின் 80% எண்ணையைக் கொண்டுள்ள சிர்ட்டே வளைகுடா பிராந்தியத்தில் இருக்கும் சைரென்னிகா, பெங்காஸி டோப்ருக் போன்ற கலவரக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ ஆலோசகர்களும், உளவுப்பிரிவு அதிகாரிகாரிகளும் வந்திறங்கியுள்ளனர்.
அதற்கும் முன்பாக சென்ற வருட அக்டோபர் மாத வாக்கிலேயே லிபியாவோடு எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த செவ்ரான் மற்றும் ஓக்ஸிடென்டல் பெட்ரோலியம் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் எண்ணை துரப்பணத்திற்காகவும் புதிய எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றிருந்த லைசென்சுகளை புதுப்பிக்கவில்லை. அப்போதே ரசிய ஊடகங்கள் லிபியாவின் மேல் மேற்கத்திய நாடுகள் இராணுவ நடவடிக்கை ஒன்றைத் துவங்குவதற்கான சாத்தியங்கள் பற்றி எழுதத் துவங்கிவிட்டன.
லிபியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்தின் வழியே நவீன ஆயுதங்களும் வெடி பொருட்களும் கடந்த மாதத் துவக்கத்திலிருந்தே போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. யுகோஸ்லோவிய விவகாரத்தில் கையாண்ட அதே போன்ற தந்திரத்தை லிபியாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றி விடலாம் என்று மேற்கத்திய நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், மார்ச் மாதத் துவக்கத்தில் கடாஃபியின் இராணுவம் தொடுத்த எதிர்த் தாக்குதல்கள் ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது. மார்ச் 4-ஆம் தேதி துவங்கிய லிபிய இராணுவ நடவடிக்கையின் விளைவாய் கலக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான நகரங்களை இராணுவம் மீண்டும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
உடனடியாக தனது ஊதுகுழலாக செயல்படும் சர்வதேச ஊடகங்கள் மூலம் லிபியாவில் படுபயங்கரமான இனப்படுகொலை நடப்பதாக பீதியூட்டும் பிரச்சாரங்களை அமெரிக்கா கட்டவிழ்த்து விடுகிறது. இதன் மூலம், லிபியாவில் நடந்து கொண்டிருப்பது துனீசியா, எகிப்து போன்ற அமைதி வழிப் போராட்டம் என்பது போன்றும் அதை கடாஃபி ஆயுதம் கொண்டு கொடூரமாக ஒடுக்குகிறார் என்பது போன்றும் ஒரு சித்திரம் திட்டமிட்ட ரீதியில் கட்டமைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து “மனிதாபிமானத்தின்” அடிப்படையில் தாம் லிபிய விவகாரத்தில் தலையிடுவதாகச் சொல்லிக் கொண்டு மார்ச் 19-ஆம் தேதி துவங்கி தொடர்ந்து விமானத் தாக்குதலையும் ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
பொதுவில் நீண்ட நாட்களாக மக்களுக்கான ஜனநாயகத்தை கடாஃபி மறுத்து வந்துள்ளார். மொத்த நாட்டையும் அதன் பொருளாதாரத்தையும் அவரது குடும்பமே கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகள் பலவற்றில் உள்ள சர்வாதிகாரிகளுக்கும் மன்னர்களுக்கும் கடாஃபிக்கும் இந்த அம்சங்களில் பெரும் ஒற்றுமை இருந்தது உண்மை தான். ஆனால், அடிப்படையில் வேறு ஒரு முக்கியமான அம்சத்தில் கடாஃபி மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டார் – அது தன் தேசத்தின் வளங்களை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்காமல் இருந்தது தான்.
ஜனநாயகக் கோரிக்கை லிபியாவில் ஓரளவுக்கு இருந்து வந்தது என்பதும், மக்களில் ஒரு பிரிவினர் கடாஃபியின் மேலான நம்பிக்கையை இழந்திருந்தனர் என்பதும் உண்மை தான். ஆனால், துனீசியா, எகிப்து உள்ளிட்ட அரபு தேசங்கள் போல் அல்லாது லிபியாவில் பெருமளவிலான மக்கள் போராட்டங்களோ எதிர்ப்புகளோ உருவாகிவிடவில்லை. ஆக, தற்போது லிபியாவின் ‘ஜனநாயகத்துக்காகப்’ போராடிவரும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணியின்’ (National Front for the salvation of Libya) வரலாறு என்னவென்பதை அறிந்து கொள்வது அவசியமாகிறது. அதிலும் மிகக் குறிப்பாக லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தை ஏகாதிபத்திய நாடுகள் உடனடியாகப் பிரித்து எதிர்ப்பாளர்களை அங்கீகரிக்க காட்டிவரும் அக்கறையும் கவனத்திற்குரியது.
1983-ஆம் ஆண்டு அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ மற்றும் யு.எஸ்.எய்ட் ஆகிய அமைப்புகளின் நேரடி ஏற்பாட்டில் ‘ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை’ (National Endowment for Democracy) எனும் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இராணுவ பலத்தோடு ஜனநாயகத்தை உருவாக்க முடியாத பிராந்தியங்களில் செயல்படுவதற்கென்று உருவாக்கப் பட்ட இவ்வமைப்பின் நோக்கம் – தமக்கு ஒத்துவராத சர்வாதிகாரிகள் ஆளும் நாடுகளில்  ஊடுறுவி, மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வை விதைப்பதே. அவ்வகையில் இவ்வமைப்பு எண்பதுகளில் இருந்தே லிபியர்கள் மத்தியில் ஒரு நீண்ட கால நோக்குடன் கடாஃபிக்கு எதிரான வேலைகளை ஆரம்பித்திருந்தது.
மேற்படி அமைப்பின் தீவிர ஆசியைப் பெற்றது தான் தற்போது அப்பாவிப் புரட்சியாளர்கள் என்று மேற்கத்திய ஊடகங்கள் போற்றிப் புகழும் ‘லிபிய விடுதலைக்கான தேசிய முன்னணி’. இந்த அப்பாவிகள் தமது பிறப்பிலேயே அமெரிக்க அடிவருடித்தனத்தைக் கொண்டிருந்தனர். 1981-ஆம் ஆண்டு சூடானின் அமெரிக்கக் பொம்மை சர்வாதிகாரியாக இருந்த கலோனல் ஜாஃபர் நிமிரியின் முன்னிலையில் தான் இந்த அமைப்பே தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தேசிய காங்கிரஸ், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத் துறைகளின் ஏற்பாட்டில் 2005-ஆம் ஆண்டு லண்டனிலும் பின்னர் ஜூலை 2007-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் நடைபெற்றுள்ளது.

கடாபியின் சரணடைவும், தேசிய எண்ணைய் நிறுவனமும்

இதில் மிகவும் கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின், தீவிரவாதத்திற்கு எதிரான போர் எனும் பெயரில் தன் எதிரி நாடுகளை வேட்டையாட அமெரிக்கா துவங்கியிருந்த ஆரம்ப நாட்களில் லிபியாவையும் தீமைக்கான அச்சு நாடுகள் பட்டியலில் சேர்த்திருந்தது. ஆப்கான், ஈராக்கைத் தொடர்ந்து தனது கொலைப் பட்டியலில் ஈரானையும் லிபியாவையுமே வைத்திருந்த நிலையில், வேறு நாடுகளின் ஆதரவு இல்லாத நெருக்கடியில் கடாஃபி தன்னிச்சையாக அமெரிக்க ஆதரவு நிலையை எடுக்கத் தள்ளப்படுகிறார்.
அவரே சுயமாக முன்வந்து தமது நாட்டின் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிடுவதாக அறிவித்ததோடு அல்லாமல், அது தொடர்பாக லிபியா சேகரித்து வைத்திருந்த தொழில்நுட்ப விபரங்களையும் கருவிகளையும் ஒப்படைக்கவும் செய்கிறார். மட்டுமல்லாமல், அல்குவைதா அமைப்பைப் பற்றிய மிக முக்கியமான உளவுத் தகவலையும், அணு ஆயுதக் கள்ளச் சந்தை பற்றிய உளவுத் தகவல்களையும் கூட அமெரிக்க உளவுத் துறைக்கு கையளிக்கிறார். அதைத் தொடர்ந்து லிபியா திருந்தி விட்டதாக ஞானஸ்நானம் அளிக்கும் அமெரிக்கா, அதன் மேல் இருந்த பொருளாதாரத் தடைகளையும் 2004-ஆம் ஆண்டே விலக்குகிறது. கடாஃபியும் தனது படை பரிவாரங்களோடு ஐரோப்பிய தேசங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் – கடாஃபியின் பில்லியன் கணக்கான பெட்ரோ டாலர்கள் அமெரிக்காவின் நிதிமூலதனச் சூதாடிகளான ஜே.பி.மார்கன் மற்றும் சிட்டி குரூப்பில் முதலீடு செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களான எக்ஸான்மொபில், ஹாலிபர்ட்டன், செவ்ரான், கொனாகோ மாரத்தான் ஆயில் போன்ற பெட்ரோலிய நிறுவனங்களும், ரேய்த்தியன் நார்த்ராப், க்ரம்மன் போன்ற ஆயுதக் கம்பெனிகளும் டவ் கெமிக்கல்ஸ் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் அமெரிக்க லிபிய பொருளாதார மேம்பாட்டுகென அமைப்பு ஒன்றையும் (USLBA) 2005-ஆம் ஆண்டு துவங்குகிறார்கள்.
ஆக, தெளிவாக ஒரு மேற்கத்திய ஆதரவு நிலையை கடாஃபி எடுத்த பின் இந்தப் போருக்கான தேவை ஏன் எழுந்தது? ஒரு பக்கம் கடாஃபியோடு உறவாடி வந்த நிலையில், இன்னொரு பக்கம் அவரின் எதிர்ப்பாளர்களை அமெரிக்காவும் அதன் அல்லக்கை நாடுகளும் ஏன் வளர்த்து விட வேண்டும்? லிபியர்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காகவே அப்படிச் செய்தார்கள் என்பதை விரல் சூப்பும் குழந்தை கூட ஒப்புக் கொள்ளாது. அப்படி ஜனநாயகத்தின் மேல் உண்மையில் அமெரிக்காவுக்கு காதல் இருக்குமானால், டொமஹாக்கின் முதல் இலக்கு பஹ்ரைனாகவோ சவூதியாகவோ தான் இருந்திருக்க முடியும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஜனநாயகத்திற்கா, எண்ணெய் வளத்தை கைப்பற்றவா?

அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது. அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.
தற்போதைய ஆய்வு முடிவுகளின் படி, லிபியாவில் 60 பில்லியன் பேரல் எண்ணை ரிசர்வாக உள்ளது. உலகின் மொத்த எண்ணை மற்றும் எரிவாயு ரிசர்வுகளில் 3.34% லிபியாவில் இருக்கிறது. அமெரிக்க ஐரோப்பிய எண்ணை நிறுவனங்கள் லிபியாவின் தேசிய எண்ணை கார்பொரேஷனுடன் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தாலும், சீனாவின் தேசிய பெட்ரோலிய கார்பொரேஷனும் லிபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.எண்ணை துரப்பணம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக சுமார் 30,000 சீனத் தொழிலாளிகள் லிபியாவில் உள்ளனர். லிபியா மட்டுமல்லாமல், சீனா பிற ஆப்ரிக்க தேசங்களிலும் கனிமங்கள், பெட்ரோல் போன்ற இயற்கை வளங்களின் வர்த்தகத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு போட்டியாக உருவெடுத்து வருகிறது.
இந்தப் பின்னணியில், அமெரிக்காவின் லிபியா போர் என்பது நேரடி ஆக்கிரமிப்பு என்பதையும் கடந்த ஒன்றாகும். வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக, உலகின் 60% எண்ணை ரிசர்வைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு சிறிய அங்கம் தான் லிபியப் போர்.
தற்போது லிபியாவின் ஜனநாயகப் ‘போராளிகள்’ முக்கியமாகக் கட்டுப்படுத்தும் பிரதேசங்கள் கடாஃபியால் 1969-இல் பதவியிறக்கப்பட்ட முன்னாள் மன்னருக்கு ஆதரவானவர்கள் நிறைந்த பிரதேசம் என்பதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எண்ணை வயல்களும் எரிவாயுக் குழாய்களும் கொண்ட பகுதி என்பது தற்செயலானதல்ல. மட்டுமல்லாமல், கலகக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியத்தை அங்கீகரித்து, சட்டப்பூர்வமானதாக அறிவிக்கவும் மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கக் கனவுகள் நிறைவேறத் தேவையென்றால் எந்த நாட்டின் மேலும் எப்போது வேண்டுமானாலும் தனது இராணுவத்தை ஏவி விடலாம் என்கிற ஒரு எதார்த்தத்தை ஈராக் யுத்தத்திற்குப் பின் அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. இறையாண்மை, தேசம், தேச எல்லைகளின் புனிதம் என்றெல்லாம் பேசியது மெல்ல மெல்லப் பழங்கதையாகி வருகிறது. லிபியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டவோ, அதற்காக அதன் மேல் தாக்குதல் தொடுக்கவோ அமெரிக்காவுக்கு இருக்கும் உரிமை குறித்து உலக நாடுகள் எந்தக் கேள்வியும் கேட்காமல் லேசான முணுமுணுப்புகளோடு ஒப்புக் கொள்ளும் அடிமை மனநிலைக்கு வந்து விட்டன. ஒரு வேளை லிபியாவின் அரச படைகளை தங்கள் ஆதரவையும் ஆயுதத்தையும் பெற்ற ‘புரட்சியாளர்கள்’ வென்று முழு லிபியாவையும் கைப்பற்ற இயலாது போனால், குறைந்தபட்சம் அவர்கள் வசமிருக்கும் எண்ணை வயல்கள் மிகுதியாகக் கொண்ட பிரதேசத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் லிபியாவின் எல்லைக் கோடுகளை திருத்தி வரையும் முயற்சியிலும் மேற்கத்திய நாடுகள் இறங்கியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல் நேட்டோ படைகளின் தாக்குதலுக்குக்கு ஒப்புதல் பெறும் வாக்கெடுப்பில் தீர்மானத்தை எதிர்த்து வாக்காளிக்காமல் புறக்கணித்த இந்தியா பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் கைக்கூலிகள் என்றால், ஜெர்மனிக்கு லிபியாவோடு கடந்த நவம்பரில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை பற்றித் தான் கவலை. மற்றபடி, இரசியா சீனா உள்ளிட்ட பிற நாடுகளும் கூட, லிபிய விவகாரத்தில் தலையிடும் அமெரிக்க உரிமை குறித்து கேள்வியெழுப்பவில்லை.
ஒரு உலக ரவுடியாக  உருவெடுத்துள்ள அமெரிக்கா, தன்னைத் தானே உலகப் போலீசாகவும் நியமித்துக் கொண்டுள்ளது. யேமனிலும், பஹ்ரெய்னிலும், சவூதியிலும் நடந்து வரும் அரச எதிர்ப்பு / சர்வாதிகார எதிர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் அமெரிக்க ஆதரவு பெற்ற அடிவருடிக் கும்பல்கள் மிருகத்தனமாக ஒடுக்கிவரும் நிலையில், லிபியாவின் மேல் அமெரிக்கா அக்கறை கொள்வதன் உண்மையான நோக்கம் ஜனநாயகம் அல்ல – அது எண்ணையும் இயற்கை வளங்களும் தான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் செலவு உங்கள் தலையில்!

ஒவ்வொரு முறை பெட்ரோலிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போதும் உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருப்பதை கடந்த கால அனுபவங்களில் இருந்து நாம் உணர்ந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க வெறியின் செலவு மறைமுகமாக உலக மக்கள் அனைவரின் தலைமேல் தான் சுமத்தப்படுகிறது. மறைமுகமாக நம்முடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு ஈராக்கியனின் உயிருக்கும், லிபியனின் உயிருக்கும், ஆப்கானியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கும் இருக்கிறது.
நம்மை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நமது நாட்டோடும் ஆட்சியாளர்களோடும் மட்டுமே தொடர்புடைய ஒன்றல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போர்களின் ‘நன்மைகளை’ ஏகாதிபத்தியங்களும் அதன் பன்னாட்டுக் கம்பெனிகளும் அறுவடை செய்து கொள்ளும் அதே வேளையில் அதன் சுமை உலகம் மொத்தமும் உள்ள உழைக்கும் மக்களின் தலையில் தான் சுமத்தப்படுகிறது.
அன்று கொஸாவாவிலும், நேற்று ஈராக்கிலும் ஆப்கானிலும், இன்று லிபியாவிலும் வெடித்துச் சிதறும் டொமஹாக் ஏவுகணைகளின் நேரடி இலக்குகளாக அந்த நாடுகளின் அப்பாவி மக்கள் இருந்தார்கள் என்றால் அதன் மறைமுக இலக்கு நாம் தான். எனவே, இது எங்கோ அப்ரிக்கக் கண்டத்தின் ஒரு மூலையில் இருக்கும் லிபியர்களின் பிரச்சினை மட்டுமல்ல. நம்முடைய பிரச்சினையும் தான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் கடமை ஈராக்கியர்களோடும் ஆப்கானியர்களோடும் லிபியர்களோடும் மட்டும் முடிந்து விடுவதல்ல – அது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி இராமநாதபுரம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் எம்.தமிமுன் அன்சாரி அவர்களும், ஆம்பூர் தொகுதியில் ஏ.அஸ்லம் பாஷா அவர்களும் போட்டியிடுகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களை இன்று (28.03.2011) பரிசீலனை செய்த தேர்தல் அதிகாரிகள் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...


இந்நிலையில் இராமநாதபுரத்திலும், ஆம்பூரிலும் இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி தொகுதிக்கு புதன்கிழமை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Monday, March 28, 2011

தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி கடும் போட்டி:சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

seppakkam.jpg

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் வாழ்ந்தது, கடற்கரையை ஒட்டியது, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த மசூதிகள்கொண்டது என, பல்வேறு சிறப்பு பெற்ற இடங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.புதிய, பழைய தலைமை செயலகங்கள், சென்னை பல்கலைக்கழகம், பழமை வாய்ந்த கல்லூரிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், மத்திய ஆய்வு கூடம் ஆகியன இங்குள்ளன.

இதுவரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என தனித்தனி தொகுதிகளாக இருந்த தொகுதிகள்தற்போது இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என தொகுதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், 79, 81 முதல், 93, 95 முதல், 111 ஆகிய, வார்டுகள் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் இதுவரை வென்றவர்கள்: சேப்பாக்கம் தொகுதியில், 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க.,வின் ரகுமான்கான், 89ல், தேசிய லீக்கின் அப்துல் லத்தீப், 1991ல், காங்கிரசின் ஜீனத் ஷெரிப்தீன், பின்னர், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

திருவல்லிக்கேணி தொகுதியில், 1952ல், காங்கிரசின் சம்பந்தம், 57ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 1962, 67, 71ல், தி.மு.க.,வின் நெடுஞ்செழியன், 77ல், தி.மு.க.,வின் ரங்கநாதன், 80ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 84ல், முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, 89ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 91ல், அ.தி.மு.க.,வின் முகமது ஆசீப், 96ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 2001ல், தி.மு.க.,வின் உசைன், 2006ல், அ.தி.மு.க.,வின் பதர்சயீத்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தற்போதைய நிலவரம்: சேப்பாக்கம் தொகுதியில் கடந்த மூன்று முறை முதல்வர் கருணாநிதி வென்றிருந்தாலும், கழிவு நீர் பிரச்னை, இட நெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

புதிய தலைமை செயலகம் இட மாற்றத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மரங்கள் அழிப்பு போன்றவையும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வி.ஐ.பி., தொகுதி என்பது மட்டுமே அவர்களின் சந்தோஷமாக இருந்தது.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கருணாநிதி இம்முறை திருவாரூரிலும், திருவல்லிக்கேணியில் வென்ற பதர்சயீத் வாய்ப்பு இல்லாததாலும் புது முகங்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் இத்தொகுதியில், மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், மாநில துணைப் பொதுச் செயலர் தமீம் அன்சாரி போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணி சார்பில், ஜனதா கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில், எஸ்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு:இத்தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் ஓட்டுகளும், பிராமணர்கள் ஓட்டுகளும் உள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவதால், கணிசமான முஸ்லீம் ஓட்டுகளை அக்கட்சியும், பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கட்ராமன் போட்டியிடுவதால், கணிசமான பிராமணர் ஓட்டுகளை அவரும் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளும், நடுத்தர மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு அக்கட்சி செய்த நலத்திட்ட உதவிகள் பெரும் உதவியாக இருக்கும். கடந்த தேர்தல் முடிவுகளை கூட்டி கழித்து பார்க்கும் போது, இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற பிரகாசமான
வாய்ப்புகள் உள்ளன.இருப்பினும், பிரசார வியூகம், தேர்தல் நாள் நடைமுறைகள், வாக்கு பதிவு ஆகியவையே வெற்றிதமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., - மனிதநேய மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவுவதால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது கணிக்க முடியாத நிலையில் உள்ளது.சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வரலாறு:மொத்தமுள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுவது, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பாடல் பெற்றதுமான பார்த்தசாரதி கோவில், பாரதியார் இறுதி காலத்தை கழித்தது, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகியோர் வாழ்ந்தது, கடற்கரையை ஒட்டியது, 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து மேல்நிலைப்பள்ளி, தென்னிந்தியாவின் பழமை வாய்ந்த மசூதிகள்கொண்டது என, பல்வேறு சிறப்பு பெற்ற இடங்கள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.புதிய, பழைய தலைமை செயலகங்கள், சென்னை பல்கலைக்கழகம், பழமை வாய்ந்த கல்லூரிகள், சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம், மத்திய ஆய்வு கூடம் ஆகியன இங்குள்ளன.

இதுவரை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என தனித்தனி தொகுதிகளாக இருந்த தொகுதிகள்தற்போது இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என தொகுதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின், 79, 81 முதல், 93, 95 முதல், 111 ஆகிய, வார்டுகள் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிகளில் இதுவரை வென்றவர்கள்: சேப்பாக்கம் தொகுதியில், 1977, 80, 84 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க.,வின் ரகுமான்கான், 89ல், தேசிய லீக்கின் அப்துல் லத்தீப், 1991ல், காங்கிரசின் ஜீனத் ஷெரிப்தீன், பின்னர், 1996, 2001, 2006 ஆகிய மூன்று தேர்தல்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

திருவல்லிக்கேணி தொகுதியில், 1952ல், காங்கிரசின் சம்பந்தம், 57ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 1962, 67, 71ல், தி.மு.க.,வின் நெடுஞ்செழியன், 77ல், தி.மு.க.,வின் ரங்கநாதன், 80ல், காங்கிரசின் ஹாஜா ஷெரீப், 84ல், முஸ்லிம் லீக்கின் அப்துல் சமது, 89ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 91ல், அ.தி.மு.க.,வின் முகமது ஆசீப், 96ல், தி.மு.க.,வின் நாஞ்சில் மனோகரன், 2001ல், தி.மு.க.,வின் உசைன், 2006ல், அ.தி.மு.க.,வின் பதர்சயீத்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தற்போதைய நிலவரம்: சேப்பாக்கம் தொகுதியில் கடந்த மூன்று முறை முதல்வர் கருணாநிதி வென்றிருந்தாலும், கழிவு நீர் பிரச்னை, இட நெருக்கடி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே இருந்து வருகின்றன.

புதிய தலைமை செயலகம் இட மாற்றத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மரங்கள் அழிப்பு போன்றவையும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. வி.ஐ.பி., தொகுதி என்பது மட்டுமே அவர்களின் சந்தோஷமாக இருந்தது.
கடந்த முறை இத்தொகுதியில் வென்ற கருணாநிதி இம்முறை திருவாரூரிலும், திருவல்லிக்கேணியில் வென்ற பதர்சயீத் வாய்ப்பு இல்லாததாலும் புது முகங்கள் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். தி.மு.க., சார்பில் இத்தொகுதியில், மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., கூட்டணியில் இத்தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், மாநில துணைப் பொதுச் செயலர் தமீம் அன்சாரி போட்டியிடுகிறார்.பா.ஜ., கூட்டணி சார்பில், ஜனதா கட்சி வேட்பாளர் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அக்கட்சி சார்பில், எஸ்.வெங்கட்ராமன் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு:இத்தொகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம் ஓட்டுகளும், பிராமணர்கள் ஓட்டுகளும் உள்ளன.அ.தி.மு.க., கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுவதால், கணிசமான முஸ்லீம் ஓட்டுகளை அக்கட்சியும், பா.ஜ., கூட்டணி சார்பில் வெங்கட்ராமன் போட்டியிடுவதால், கணிசமான பிராமணர் ஓட்டுகளை அவரும் அறுவடை செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏழைகளும், நடுத்தர மக்களும் இத்தொகுதியில் கணிசமான அளவில் உள்ளனர். அதனால், தி.மு.க.,விற்கு அக்கட்சி செய்த நலத்திட்ட உதவிகள் பெரும் உதவியாக இருக்கும். கடந்த தேர்தல் முடிவுகளை கூட்டி கழித்து பார்க்கும் போது, இத்தொகுதியில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி பெற பிரகாசமான
வாய்ப்புகள் உள்ளன.இருப்பினும், பிரசார வியூகம், தேர்தல் நாள் நடைமுறைகள், வாக்கு பதிவு ஆகியவையே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும்.

வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் -89 ஆயிரத்து 688
பெண்கள் - 89 ஆயிரத்து 815
திருநங்கைகள் - 7
மொத்தம் - 1 லட்சத்து 79 ஆயிரத்து 510
வாக்கு சாவடிகள் - 184
தேர்தல் அதிகாரி - சென்னை குடிநீர் வாரியபொது மேலாளர் பாஸ்கரன். போன்: 78450 20000.

அருண் ஜெட்லியிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – ராம் விலாஸ் பஸ்வான்

 

PATNA AIRPORT MAI   PRESS  SE  BAT  KERTE  RAMVILAS  PASWAN
புதுடெல்லி:ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டுமென பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க தூதரக அதிகாரியிடம் ஜெட்லி கூறியது ஹிந்துத்துவாவாதிகளின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
முஸ்லிம்களுக்கெதிரான துவேசத்தை வளர்ப்பதற்காகவே பா.ஜ.க ஹிந்துத்துவா தேசியவாதத்தை உபயோகிக்கிறது என லோக் ஜனசக்தியின் பொதுச்செயலாளர் அப்துல் காலிக் தெரிவித்துள்ளார்.
ஹிந்துத்துவா என்பது உண்மையான சித்தாந்தம் அல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை வளர்த்தி வாக்கு வங்கிகளை உருவாக்கத்தான் பா.ஜ.க முயன்றுள்ளது.
பங்களாதேஷிலிருந்து முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் ஹிந்துத்துவா தேசிய வாதம் நன்றாக செல்லுபடியாகும் என அருண்ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியில் இது செல்லுபடியாகாது. பாராளுமன்றத் தாக்குதலைப் போல ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் டெல்லியில் நிலைமை மாறும் என ஜெட்லி அமெரிக்க தூதரிடம் கூறியிருந்தார்.
மலேகான்,அஜ்மீர்,மக்கா மஸ்ஜித்,சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பா.ஜ.க தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வது நிரூபணமாகியுள்ளது என அப்துல் காலிக் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லியை சாடியுள்ளது.பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மதத்தை சுய ஆதாயங்களுக்காக பயன்படுத்துவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷக்கீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெண்களுக்கு ஒரு சீட் கூட ஒதுக்காத பா.ம.க.,: 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்போம் என்கிறது.

பா.ம.க., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்துவோம் என அறிவித்த ராமதாஸ், தன் கட்சி சார்பில் ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தாதது, அவரது கட்சியில் உள்ள மகளிரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடந்த 21ம் தேதி, கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு, 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க, வலியுறுத்துவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேடைகளில் ராமதாஸ் பேசும்போதும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் அந்தத் தலைமுறையே கல்வி கற்றதற்கு சமம். பெண்கள் வரதட்சணை கொடுக்கக் கூடாது. படித்து வேலைக்கு செல்ல வேண்டும். பெண்களை ஆண்கள் மதிக்க வேண்டும். அவர்களை சமமாக நடத்த வேண்டும். பெண்கள் சொல்வதை கேட்டு ஆண்கள் நடக்க வேண்டும் என அறிவுரை வழங்குவார். அவை அனைத்தும் பேச்சளவே என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வின் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மேடைதோறும் பேசி வந்த ராமதாஸ், தன் கட்சியில் ஒரு சீட் கூட பெண்களுக்கு ஒதுக்க முன் வராதது, அவரது கட்சியில் உள்ள பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், இட ஒதுக்கீட்டிற்காக போராடுவதாகக் கூறிக் கொண்டு, இரண்டு தனித் தொகுதிகளை மட்டும் கூட்டணியில் பெற்றுள்ளார். அதில் மட்டுமே ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற தொகுதிகளில் தன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே களம் இறக்கியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பா.ம.க., மட்டுமின்றி, அனைத்து கட்சிகளுமே குறைந்த அளவிலேயே பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சியில் பெண்களுக்கான இட ஒதுக்கீடை அமல்படுத்த முன் வரவில்லை. பா.ம.க., ஒரு பெண் வேட்பாளரை கூட நிறுத்தாததன் மூலம், ஊருக்குதான் உபதேசம் எனத் தெரிவித்துள்ளது.

முகம் சுளிக்க வைக்கும் தேர்தல் வாக்குறுதிகள்! - தங்கர் பச்சான் .

Thankar Bachanசென்னை: இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல். அதைப் புரிந்து கொள்ளாமல் அரசியல்  கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட்டிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது என தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

சினிமா ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர் பச்சான் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"அடுத்த 5 ஆண்டுகள் தமிழகத்தை ஆளக்கூடியவர்களை தேர்வுசெய்யக்கூடிய பொறுப்பும், கடமையும் வாக்காளர்களாகிய நமக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. சரியானவர்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு பின்னர் குறைசொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் வேலை. ஆனால், ஏலம் போடுவது மாதிரி உங்களை விட நான் என்னவெல்லாம் தருகிறேன் பாருங்கள் என்று சொல்லி மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலவசங்கள் எதுவாக இருந்தாலும் அவை மனிதனின் தன்மானத்தை உரசிப்பார்க்கும் செயல்கள்தான். அவரவர்கள் சொந்த காலில் நின்று உழைத்து பொருளாதாரத்தை உயர்த்தி தன் உழைப்பில் குடும்பத்தை நடத்திக் கொள்வதற்கான எந்த திட்டமும் இந்த வாக்குறுதிகளில் இல்லை.

ஏற்கனவே தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ சிந்திக்காமல் உழைக்கத் தயங்கி மாதத்திற்கு 10 நாட்கள் வேலைசெய்தால் போதும் என அந்த பணத்தில் முக்கால்வாசியை டாஸ்மாக் கடைக்கு செலவழித்துவிட்டு கால்வாசியைக்கூட தன்னையே நம்பி இருக்கிற குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பெற்றோருக்கும் தராமல் சோம்பேறியாக அலைந்து கொண்டிருக்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

இந்த நிலையில், அவனுக்கு எல்லாவற்றையுமே அரசாங்கம் வீட்டுக்கு வந்து இலவசமாக கொடுத்துவிட்டால் அவன் உழைத்து முன்னேற வேண்டும் என்ற முனைப்பே இல்லாமல் பிச்சைக்காரன் போல் எல்லா தேவைக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்கக்கூடிய காலம் வந்துவிடும்.

தங்கள் பொருட்களை மக்களிடத்தில் விற்பனை செய்ய வியாபாரிகள் மேற்கொள்ளும் விளம்பர தந்திரங்களைத்தான் இப்போது ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் போல மேற்கு வங்காள மாநிலத்திலும் சட்டசபை  தேர்தல் நடக்க இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுகொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் மம்தா பானர்ஜியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், எந்த ஒரு இலவச திட்டமும் இல்லை. எல்லா திட்டங்களுமே வேலைவாய்ப்பு, தொழில்நிறுவனங்கள், விவசாயம் தொடர்பான, மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் திட்டங்கள்தான்.

தமிழகத்தில் சாராய கடைகளை மூடாமல் எத்தனை திட்டங்கள் கொண்டுவந்தாலும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேறாது. எனவே, மதுவிலக்கை அறிவிக்கப்போகும் கூட்டணிக்குத்தான் பெண்கள் வாக்களிக்க காத்திருக்கிறார்கள்."


[தேர்தல் ஆனையம் மீது] முதல்வர் கோபப்படுவானேன்?

தேர்தல் ஆணையம் தனது கடமையைச் சிறப்பாக, பாரபட்சமின்றிச் செய்கிறது என்று பாராட்ட வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் அதிகப்படியான கெடுபிடிகள் காட்டுவதாகக் கண்டனம் தெரிவித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்குப் போலீஸ் டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள்வரை பல பேரை தேர்தல் ஆணையம் பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் நேர்மையாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதற்காக- தமிழக அரசிடம்கூட கேட்காமல்- இவர்களை மாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழக முதல்வரின் மிகப்பெரிய வருத்தம்.

 தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களிலும்கூட காவல்துறை உயர் அதிகாரிகள் வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் கூட, தேர்தல் முடியும்வரை வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது எதற்காக அதிகாரிகள் மாற்றத்துக்காக முதல்வர் இவ்வளவு கோபம் கொள்ள வேண்டும்?

 தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சிறப்பாகவும், பாரபட்சமின்றியும், ஆளும்கட்சியாக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமலும் நடவடிக்கையை முடுக்கியிருப்பது பொதுமக்களிடம் தேர்தல் ஆணையத்தின் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் உண்டாக்கி வருகிறது.

 வெறுமனே எதிர்க்கட்சிகள் கூறியதால் இந்த நடவடிக்கை என்று முதல்வர் கூறினாலும், தேர்தல் ஆணையம் மிக எச்சரிக்கையாகவும், இது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டால் பதில் சொல்லக்கூடிய ஆதாரங்களுடனும்தான் செயல்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலாக, அரசு இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் டி.வி. கிடைக்கப்பெறாதவர்களுக்கு டோக்கன் கொடுத்து, மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு டி.வி. கொடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையுத்தரவுக்குப் பிறகும் இத்தகைய நடவடிக்கை ஒரு மாவட்டத்தில் நடக்கும் என்றால் அது அந்த மாவட்ட வருவாய்த்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் இணக்கம் இல்லாமல் இயலாது.

 இத்தகைய ஆட்சியாளர்கள் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு எத்தகைய ஒத்துழைப்புத் தர முடியும்? ஆகவே தேர்தல் முடியும் வரை அவர்களை வேறு பணிக்கு மாற்றுவதில் என்ன தவறு?

 இத்தகைய புகார்களை எதிர்க்கட்சிகள் கூறியதால் மட்டுமே தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தும், விசாரித்தும், விடியோ பதிவுகள் மூலம் "ஷேடோ ரிஜிஸ்டர்' எனப்படும் நிழல்பதிவு மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் கிடைக்கும் செய்திகளையும் வைத்துத்தான் இந்த இடமாறுதல்களைச் செய்துள்ளனர்.

 நியாயமாகப் பார்த்தால், தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆட்சியாளர்கள் மீதும் மற்ற அலுவலர்கள் மீதும் துறைவாரி நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் அதைச் செய்யாமல் வெறுமனே இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது என்பதை முதல்வர் ஏன் ஏற்க மறுக்கிறார் என்று தெரியவில்லை.

 கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் ரூ.17 கோடி வரை, கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. கடந்த ஒரு மாதமாக இதுபற்றிப் பேசாத முதல்வர், இப்போது சில அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டபோது குரல் கொடுக்கிறார்.

 தேர்தல் ஆணையம் நடத்தும் இத்தகைய வாகனச் சோதனைகள் சாதாரணப் பயணிகளுக்கும்கூட சில நேரங்களில் இடையூறாகவும் காலதாமதப்படுத்துவதாகவும் அமைகிறது என்பது உண்மையே. ஆனால் இந்த நடவடிக்கைகள், கருப்புப் பணத்தைக் கொண்டு செல்வோருக்கு மட்டுமே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நியாயமான கணக்கு உள்ள பணத்தைக் கொண்டு செல்வோர் தினமும் வங்கிகளுக்குக் கொண்டு செல்லவும் பணம் செலுத்தவும் தடை எதுவும் இல்லை.

 அரசுக்குத் தெரியாமல், வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வியாபாரம் செய்வோர் மட்டுமே, காசோலைகளை, வரைவோலைகளைப் பயன்படுத்தாமல் ரொக்கமாக எடுத்துச் செல்கின்றனர் என்பதுதான் பல சோதனைகள், பணப்பறிமுதல்கள் மூலம் தெரியவந்துள்ள உண்மை. எதற்காக அந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குச் சரியான காரணமும் விளக்கமும் அளித்தவர்களுக்கு அந்தப் பணம் திரும்ப வழங்கப்பட்ட செய்திகளும் பத்திரிகைகளில் வந்து கொண்டிருக்கின்றன.

 தேர்தலுக்காக மட்டும் இது நடத்தப்படாமல், எல்லா நாள்களிலும் நடத்தப்பட்டால் கருப்புப் பணப் புழக்கம் மிகவும் குறையும் என்று அரசுக்கு யோசனை சொல்ல வேண்டிய முதல்வர், இந்த நடைமுறையைக் கண்டிப்பது ஏன் என்று புரியவில்லை.

 தேர்தல் ஆணையம் இப்போது மிகத்தெளிவாக ஒன்றைத் தெரிவித்துள்ளது. வாக்குப் பெறுவதற்காகப் பணம், பொருள் கொடுக்கும் அரசியல் கட்சி மீது வழக்குப் பதிவு செய்வதோடு, அதை வாங்கிக்கொள்ளும் வாக்காளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் பெறுவதும் குற்றம்.

 இந்தக் குற்றத்தை நிரூபிக்க கைப்பேசியில் பதிவு செய்த புகைப்படங்கள்கூடப் போதுமானது. நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 தேர்தல் ஆணையத்தின் சிறப்பான செயல்பாடுகள் கெடுபிடிகள் என்றே வைத்துக்கொண்டாலும் இது அடுத்துவரும் ஐந்தாண்டு கால ஆட்சிக்கானது என்பதைக் கருதினால் இந்த இரு வார கெடுபிடிகள் பெரிய விஷயமல்ல. சோதனையிடும்போது நேர்மையாளர்கள் சில சிரமங்களை அனுபவிக்கக்கூடும்தான். மக்களாட்சி முறையாக நடைபெறுவதற்காக கொஞ்சம் சிரமம் அனுபவித்தால்தான் என்ன?

 வாக்குக்குப் பணம் கொடுக்கும் கட்சிகள்தான் இந்த நடவடிக்கையை எதிர்க்கும், கண்டிக்கும், கூக்குரலிடும். எதிர்க்கட்சிகளின் குரல் கேட்கவில்லை. ஆளும் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் குரலும் கேட்கவில்லை. ஆனால் முதல்வர் குரல் அல்லவா கேட்கிறது, ஏன்?

Tnks Dinamani

சிந்தனைக்குரிய யோசனை...

பேறுகாலத்தில் மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை ஆசிய நாடுகளில்தான் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில், 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில், கர்ப்பிணிப் பெண்களின் மரணம் 254 ஆகவும், தமிழ்நாட்டில் இதன் அளவு 111 ஆகவும் இருந்தது. இந்த விகிதாசாரம், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது 25 விழுக்காடு அதிகம் என்கிறது உலக வங்கி.
 ஆந்திரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இத்தகைய மரணம் பல மடங்கு குறைவு. இருப்பினும்கூட, தொடர்ந்த முயற்சிகள் காரணமாக 2009-ம் ஆண்டு 79 கர்ப்பிணிகள் மரணம் எனக் குறைந்துள்ளது.
 பேறுகாலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மரணம் என்பது மருத்துவ வசதிகள் சென்றடையாத கிராமங்களில்தான் அதிகம் என்கிற நம்பிக்கை நம்மிடையே வேரூன்றி இருக்கிறது. ஆனால் அண்மையில், ஐஏஎஸ் அதிகாரியான ஷீலாராணி சுங்கத் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்த கருத்து ஒரு மாற்றுச் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.
 ""மகப்பேறு தொடர்பான பாரம்பரிய அறிவை நாம் தக்க வைத்துக்கொள்ளவில்லை. அதை வளர்க்கத் தவறிவிட்டோம். இன்று மருத்துவமனையை நம்பி இருக்கிறோம். பாதுகாப்பான பிள்ளைப்பேறு என்ற கருத்தில், சிசேரியன் மூலம் பல குழந்தைகள் பிறக்கின்றன. மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால்தான் தாய் சேய் நலம் என்ற எண்ணம் உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை?
 தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் குழந்தை பிறப்புகளில் 40 விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் குழந்தை பிறப்பு 80 விழுக்காடு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. ஆனால் இரு மாவட்டங்களிலும் பேறுகாலத்தில் மரணமடையும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை ஒரே அளவாகத்தான் இருக்கிறது. அப்படியானால் இதன் பொருள் என்ன? என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அவர்.
 சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்களில் பெண்களே சக பெண்கள் பிள்ளைபெற உதவி செய்வது மிகமிகச் சாதாரண சம்பவமாக இருந்தது. கிராமங்களில் வயல்வெளிகளில் வேலை செய்துகொண்டிருந்தபோதே பிரசவ வலி ஏற்பட்டு, மரத்தடியில் பிள்ளை பெற்ற சம்பவங்கள் ஏராளம். கிராமங்களில் மருத்துவச்சி எனும் வயதான பெண்மணிகள் அடிவயிற்றைத் தடவிப் பார்த்தே தலை எங்கே இருக்கிறது என்பதைச் சொல்லிவிடுவார்கள்.
 அண்மையில், மதுரை அருகே உள்ள மலைவாழ் பழங்குடியினர் குடும்பம் பற்றிய செய்திக் கட்டுரையில் அந்த இனக்குழுவில் இருக்கும் யாருமே மருத்துவமனைக்கு வந்து பிள்ளை பெற்றதே இல்லை என்றும், அவர்களில் ஆண்-பெண் இருவருமே பேதமற்று இதில் திறமை பெற்றிருக்கிறார்கள் என்றும் படிக்கின்ற போது ஆச்சரியமாக இருந்தது. அவர்களைப் பொருத்தவரை தாம்பத்யம் எத்தனை இயல்பானதோ அத்தனை இயல்பானது பிள்ளை பெறுவதும்!
 மருத்துவமனைகளை மட்டுமே நம்பிக்கொண்டு, நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை நாம் மறந்துபோகிறோம். கர்ப்பத்தை உறுதி செய்வதில் தொடங்கி, மூன்றாவது மாதத்திலேயே ஸ்கேன் செய்யத் தொடங்கி, டானிக்குகள் சாப்பிடச் சொல்லி அலோபதி மருத்துவத்தால் மட்டுமே குழந்தை நலமாகப் பிறக்கும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டார்கள். கிராமத்துக் குடும்பங்கள்கூட நகரங்களுக்கு வந்து தனியார் மருத்துவமனைகளில் ரூ. 5,000-க்கு குறைவுபடாமல் செலவு செய்து பிள்ளை பெற்றுச் செல்லும், அல்லது ரூ. 25,000 வரை செலவு செய்து சிசேரியன் செய்துகொள்ளும் அவல நிலை உள்ளது.
 பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் குழந்தைகள் வீடுகளில்தான் பிறந்தார்கள். பனிக்குடம் உடைந்தும் பிள்ளைப்பேறு நிகழாத நிலையில்தான் மருத்துவமனையை நாடும் வழக்கம் இருந்தது. அத்தகைய சம்பவங்களில் மட்டுமே சில கர்ப்பிணிப் பெண்கள் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்தனர் என்பதும் உண்மை.
 இன்று பெண்கல்வியும், போக்குவரத்து வசதியும், கைப்பேசி வசதியும், 108 அவசர ஊர்தி போன்ற வசதிகளும் பெருகியுள்ள இந்த நாளில் பாரம்பரிய மருத்துவத்தைக் கடைப்பிடிக்கவும், பிரசவம் கடினமானதாக இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்வதும் மிக எளிது. மகப்பேற்றில் பாரம்பரிய முறைகளைக் கையாளுதல், தேவைப்பட்டால் ஆங்கில மருத்துவத்தின் துணை நாடுதல் என்ற இரண்டும் இணையும் ஒரு நிலைமை உருவானால், அனைத்து கர்ப்பிணிகளுக்குமே பயனுள்ளதாக அமையும். இன்றைய சூழ்நிலையில் இதற்கான மருத்துவச்சியை அடையாளம் காண்பது அரிது. ஆனால், அங்கன்வாடி பணியாளர்கள், கிராமச் சுகாதார அலுவலர்களுக்கு இத்தகைய பாரம்பரிய மருத்துவ அறிவைப் புகட்டி, பயிற்சியும் அளிக்க முடியும்.
 கர்ப்பிணிப் பெண்களின் நலனைக் கருத்தில்கொண்டுதான் உலக வங்கியும் தமிழகத்துக்கு நிதியுதவி வழங்குகிறது. 2010 ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் மருத்துவச் சேவையை மேம்படுத்துவதற்காக 117 மில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இது ஏற்கெனவே தமிழ்நாடு ஹெல்த் சிஸ்டம் புராஜக்ட்டுக்காக வழங்கிய 110 மில்லியன் டாலர் நீங்கலாக வழங்கப்படும் கூடுதல் தொகை என்கிறது உலக வங்கி. 1999-லிருந்து சிசுமரணம், பேறுகால மரணம் இரண்டும் தமிழ்நாட்டில் கணிசமாகக் குறைந்து வருகிறது என்பதைப் பாராட்டி வழங்கப்பட்ட தொகை இது.
 கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதிஉதவி ரூ. 6 ஆயிரத்தை ரூ 10 ஆயிரமாக உயர்த்துவதாக தி.மு.க.வும், ரூ.12,000 ஆக உயர்த்துவதாக அ.தி.மு.க.வும் வாக்குறுதி அளிக்கிறது என்றால் அது உலக வங்கிப் பணத்தை நம்பித்தான்.
 தேவையில்லாமல் அறுவைச்சிகிச்சை, மருத்துவமனைச் செலவு என்று பணவிரயம் செய்ய வேண்டியது அவசியம்தானா? நாம் ஏன் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ள மறுக்க வேண்டும்? ஷீலாராணி சுங்கத் எழுப்பி இருக்கும் விவாதம் சிந்தனைக்கு உகந்தது. இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயற்சிப்பானேன்...
 
Tnks Dinamani

Sunday, March 27, 2011

ஏழைப்பெண்களின் திருமண அரசு உதவிகளுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ ஜாபர் சாதிக் அவர்கள்  Rural Development Department ல்
பணியாற்றுகிறார்கள். தமிழக அரசு, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள
குடும்பத்தினர்களுக்கு பல உதவி திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில்
முக்கியமானது Dr. மூவாளூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி
திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மணப்பெண்ணின் தாயாருக்கு          Rs
25000/- உதவி வழங்குகிறது (10th pass செய்திருக்கு வேண்டும்).  10 ஆம்
வகுப்புக்கு கீழே படித்தவர்களுக்கு மேலும் பல திட்டங்கள் உள்ளன.

இதுபோன்ற திட்டங்களில் பல சமுதாயத்தினர்கள் பலன் அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற உதவிகளை விட்டுவிட்டு, நம் சமூகத்தினர், ஜூம்ஆ
தொழுகைக்குப்பிறகு, உதவி வேண்டி வருவதை பார்க்கும்போது, கஷ்டமாக
இருப்பதாக சகோ உணர்கிறார்கள்.

ஆகையால் நம் சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுபோன்ற
நல திட்டங்களை பயன்படுத்திக்கொள்ளவும்.  மேலதிக விளக்கங்களுக்கு சகோ
ஜாபர் சாதிக் அவர்களை http://in.mc957.mail.yahoo.com/mc/compose?to=ajsadiq@yahoo.com  இந்த மெயிலில் தொடர்பு
கொள்ளலாம்.


 Dear All,

I am working in a government Department( Rural Development Department)
as computer assistant.  Tamilnadu government has so many funds
schemes  that are available for the below poverty line girls and
families.  The main one is Dr.Moovaloor Ramamirtham ammaiyar thirmana
nidhi udhavi thittam. The goverment is giving Rs. 25,000 to the mother
of the bride( bride should be 10th Pass). There are other schemes also
for below 10th.

I am seeing that he other community people are benefiting more than
our community. I have very hard feeling to see our brother coming in
the juma prayer and ask for the money help.

Please inform as many muslims as you can so that our community can
benefit this. This is our money we are paying more tax than any other
community. They can approach the Panchayat Union office. Taluk Office
or their panchayat cleark for any help.

If any questions, please contact me

Regards

Jaffar Sadiq
Panruti

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ ) திமுக ஆதரவு; திமுக அவசர சட்டம் பிறப்பித்து விட்டதா?

''அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது என்று அறிவித்துள்ளது ததஜ.

தனிநபர் ஜமாஅத்தின் இந்த வாதம் சரியா என்று பார்ப்போம்.

அதிமுக தலைவி ஜெயலலிதா தேர்தல்  அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக எதுவும் கூறவில்லை  என்பது உண்மையே. ஆனால் தனது தேர்தல் பிரச்சாரத்தில், சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.
என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும்.
மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா ஒன்றும் கூறாமல் துரோகம் செய்துவிட்டார் என தனிநபர் ஜமாஅத்  கூறுவது பொய்யாகும்.

அதே நேரத்தில் இந்த வார்த்தைஜால வித்தகர்கள் ஒன்று சொல்லலாம். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதெல்லாம் நம்பமுடியுமா என்று. உண்மைதான். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதை எப்படி நம்பமுடியாதோ, அதே போன்று தேர்தல் அறிக்கையில்  சொல்வதையும் நம்பிவிட முடியாது. ஏனெனில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன காங்கிரஸ் தொடர்ந்து அல்வா கொடுக்கவில்லையா? இதை தனிநபர் ஜமாஅத் மறுக்குமா?

எனவே, ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதம் அடிபட்டுவிட்டது. அடுத்து கருணாநிதி தேர்தல் அறிக்கையில் இட  ஒதுக்கீடு குறித்து சொல்லியிருக்கிறார் எனவே ஆதரிக்கிறோம் என்கிறார்கள். கருணாநிதி தேர்தல்  அறிக்கையில்  முஸ்லிம்களின் இடஒதுகீட்டை அதிகரிப்பேன் என்று ஜெயலலிதா போல் உறுதியாக சொல்லியுள்ளாரா  என்றால் இல்லவே இல்லை. இதோ கருணாநிதியின் அறிவிப்பு;

''இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டினை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.என்கிறார்.

ஜெயலலிதாவோ உயர்த்தப்படும் என்று உறுதியாக சொல்கிறார். ஆனால் கருணாநிதியோ பரிசீலிப்போம் என்று அதாவது 'பாப்போம்' என்று சாதாரணமாக சொல்கிறார். இந்த இருவரின் வார்த்தையில் எது வலிமையானது என்பது அறிவுடையோர் அறிந்து கொள்ளலாம். தேர்தல் அறிக்கையில் சொல்லாதது தான் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு காரணம் எனில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு வாக்குறுதியாக சொன்னது அனைத்தும் அரசியல்கட்சிகளால்  நிறைவேற்றப் பட்ட ஆதாரத்தை தனிநபர் ஜமாஅத் வைக்கவேண்டும்.

அடுத்து கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமெனில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக ஆக்கி அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதே நேற்றுவரை தனிநபர் ஜமாஅத்தின் கொள்கையாகும். அவர்களது உணர்வில்[18 ;24 ];

''முஸ்லிம்களின் வாக்கு திமுகவுக்கு விழவேண்டுமெனில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக அதிகரிப்போம் என்று சொன்ன கருணாநிதி, அதற்காக அவசர சட்ட திருத்தத்தை பிறப்பித்திருந்தால் ததஜ திமுகவுக்காக களப்பணியாற்றி  முஸ்லிம்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்  திமுகபக்கம் கொண்டு வந்திருக்கும். அந்த வாய்ப்பையும் கருணாநிதி நழுவ விட்டு விட்டார். என்று எழுதியிருந்தனர்.

அதாவது  கருணாநிதி அவசர சட்டம் பிறப்பித்தால் தான் ஆதரிப்போம் என்று சொன்ன தனிநபர்வாதிகள், கருணாநிதியின் எந்த அவசர சட்டத்தைப்  பார்த்து ஆதரவு நிலை எடுத்தார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமே வெளிச்சம். ஒருவேளை தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள இந்த  காலகட்டத்தில்  அவசரசட்டம் பிறப்பித்தார் என்று சொல்லப் போகிறார்களா?

அடுத்து, பொதுக்குழுவில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்  பல உள்ளன. திமுகவுக்கு ஆதரவு  என்று தான் சொல்லியுள்ளார்களே தவிர, திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று சொல்லவில்லை. எனவே,

    * மத்தியில் இட ஒதுக்கீடு விஷயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விஷயத்தில் இவர்களின் நிலை என்ன?
    * ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள், ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
    * சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
    * மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது  கிடையாது என்று எழுதிய இவர்கள், முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும்  நிலை என்ன?
    * முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
ஆக, தனிநபர் ஜமாஅத்தின் முடிவு, வேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும், வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக  'சிந்திப்பவர்களுக்கு' புலப்படும்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
-முகவை அப்பாஸ்.

Tnks http://www.intjonline.in/1652.do

Friday, March 25, 2011

எண்ணைய்க் கிணற்றுச் சண்டையா இது?

எண்ணைய்க் கிணற்றுச் சண்டையா இது?



லிபியா மீது நடாத்தப்படும் தாக்குதல் அமெரிக்காவின் இரண்டாவது எண்ணைய் கிணற்றுக்கான தாக்குதலா? என்று சர்வதேச மட்டத்தில் சந்தேகம் கிளம்பியுள்ளது.

2003ம் ஆண்டு ஈராகில் சர்வாதிகாரத்தை போக்கி அங்குள்ள மக்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உலக மக்களின் கண்களில் ம‌ண்ணைத்தூவிவிட்டு சதாமை தூக்கிலிட்டு, அங்குள்ள எண்ணைய் வளத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன.

இங்கு ஒரு கேள்வி, சதாமுக்கு பின்னால் இப்போது ஈராக் மக்கள் அங்கு நிம்மதியாக இருக்கின்றார்களா? (Is Iraqis are happy after Sadham Hussain’s death?) (Is Iraq is a peacefull country after America’s bomb action?) இதை பற்றி பேச, கேள்வி எழுப்ப உலகில் ஆள் இல்லாது போய்விட்டது.

அமெரிக்கா ஒரு சில நாடுகளை கூட்டுச் சேர்த்துக் கொண்டு, மனிதாபிமான நடவடிக்கையில் (Operation Odyssey Dawn) ஈடுபட்டுள்ளதாக பீற்றிக்கொண்டு, லிபிய நாட்டை பாதாள குழியாக்கிக் கொண்டிருக்கின்றது. 

இதற்கிடையில் பல நாடுகள் இதற்கெதிராக குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.




ஈராக் யுத்தம் தொடரும் போது உலகில் பல நாடுகளில் பாரிய யுத்தங்கள் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தன.
ஆனால் ஏன் அமெரிக்கா ஈராக்கை மட்டும் கருவறுத்தது?

அங்குள்ள எண்ணைய்க் கிண‌றுக‌ளை சொந்தமாக்கவா?

ஆம்!

அதை இப்போது சாதித்து தனக்கு தேவையான ஒருவரை பதவியில் அமர்த்தி நாடகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இப்போது இரண்டாவது நாடாக லிபியா கிடைத்திருக்கின்றது.
ஆப்பிரிக்காவில் பலநாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் இன்றுவரைக்கும் ந‌ட‌ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஏன் லிபியாவை மட்டும் பாதுகாக்க முன் வந்திருக்கின்றது?

இலங்கையில் நீண்ட 30 வருட கால யுத்தம் பல உயிர்களை காவுகொண்டது, பலர் அகதியானார்கள்,

இங்கு அமெரிக்கா அல்லது NATO அல்லது UNO ஏன் கவனம் செலுத்தாமல் இருந்தது?

உலக மக்களே சிந்திக்கும் நேரமிது.

லிபிய மக்களை பாதுகாக்க ஐக்கிய‌ நாடுக‌ள் சபையின் (ஐநாச‌பை) அனுமதியும் கிடைத்திருப்பது அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றி.

சிந்திக்க, குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது.

ஆப்பிரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் நாளுக்கு நாள் பல யுத்தங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.


அவர்களை பாதுக்காகவோ அல்லது புதிய ஆட்சி உருவாக்கவோ விரும்பாதது ஏன்?

அங்கு எண்ணைய்க் கிணறுகள் இல்லை என்பதாலா?

அங்கு வளம் இல்லை என்பதற்காகவா?

அங்கு எயிட்ஸ் நோயாளிகளும் ஏழைகளும் மட்டுமே வாழ்கின்றார்கள் என்பதற்காகவா?

அந்த நாட்டுக்காக யுத்தம் செய்து அந்தநாட்டு மக்களை காப்பாற்றினால் அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து உணவும் உடையும் கொடுக்க வேண்டி வரும் என்பதாலா?


மக்களை சிந்திக்கத் தூண்டுவதும் மாற்று நடவடிக்கை எடுக்க ஊக்கப்படுத்துவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் 'மாற்றங்கள் தேவை’யின் சிறப்பு பணி என்பதனால் இந்த கேள்விகளை எழுப்புகின்றது.

லிபியாவில் ’எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததும்’ என்று சிந்திக்கும் ஒரு விடயமும் லிபிய சண்டையின் பின்னணியில் இருக்கின்றது.

லிபிய மக்கள் மாற்று அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்த்தார்கள்.
அங்கு ஏழைகளும் உழைத்து வாழ, கதாபி வெளியேற வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

அங்கு வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆட்சிமாற்றம் மக்களின் எழுச்சிக்கு புத்துயிர் ஊட்டும் என்று எதிர்பார்த்து மக்கள் வீதிக்கு வந்தார்கள்.


ஆனால் இன்று எதிர்பார்க்காத பல நிகழ்வுகள் கண்களை கண்ணீரால் கழுவிக் கொண்டிக்கின்றன.
வைத்தியசாலைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. புத்துயிர் வேண்டியவர்கள் இப்போது மரணபடுக்கையில், நாட்டின் அரசாங்கத்தை மாற்ற மக்கள் புரட்சி தொடங்கியது.  ஆனால் நாட்டின் முகவரி ‘அமெரிக்கலிபியா’ வாக மாறப்போகின்றது. இது எதிர்பார்க்காதது.
இவ்வளவு தூரம் மக்களின் போராட்டம் கடந்து வந்ததன் பின்னரும், ’42 வருட ஆட்சி போதும் நான் கொஞ்சம் ஓய்வெடுக்கின்றேன், உங்களில் ஒருவரைதேர்வு செய்து நாட்டை வளப்படுத்துங்கள்’ என்று மனதார சொல்ல முஅம்மர் கதாபிக்கு மனமில்லாதது நாட்டை பிறர் கையில் கொடுக்கும் அவலநிலைக்கு மாற்றியுள்ளது.

ஒரு கதாபியை நாட்டை விட்டு வெளியேற்ற அனைத்து லிபியர்கள் தலையிலும் நவீன குண்டுகளை பாய்ச்சுவது எங்குள்ள மனிதாபிமானம்?

இந்த யுத்த நடவடிக்கை என்று கூறி தன்னை வளப்படுத்த எத்தனை பிஞ்சு குழந்தைகளை கொன்று குவிக்கிறது? முடமாக்குகின்றது?

குழந்தைகள் நடக்கும் வயதை அடையும் முன்னரே உலகைவிட்டு அவர்களை பிரித்துவிட முயற்சிப்பது முழு எதிர்கால பரம்பரையையும் (Future generation of Libya) திட்டமிட்டு அழிக்கும் ஒரே ஒரு நோக்கம்தான் என்றே சொல்ல வேண்டும்.

இதைத்தான் ஈராக், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன் போன்ற நாடுகளில் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கதாபி என்கின்ற சர்வாதிகாரியை வெளியேற்ற வேண்டும் என்று முன்வந்துள்ள நாடுகள் ஏன் அங்குள்ள மக்களை பற்றிச் சிந்திக்க தவறியுள்ளன? அங்குள்ள சொத்துக்கள், வளங்கள் என்னவாகும்?
மீண்டும் அப்படி ஒரு நாட்டை கட்டி எழுப்ப அமெரிக்காவோ அல்லது துணை நாடுகளோ உதவி செய்யுமா?
முஅம்மர் கதாபிக்கு ’மாற்றங்கள் தேவை’ சொல்லுவது; யுத்தம் செய்துதான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற தேவை இப்போது கிடையாது. முடியும் வரைதான் யுத்தம் செய்வோம் என்றால் நாடு முழுமையாக இரத்த ஆறாய் மாறும் வரை யுத்தம் செய்ய வேண்டும்.

மனிதர்கள் வாழ்ந்த பூமி எலும்புக் கூடுகள் தேடும் பூமியாய் மாறும் வரை தான் யுத்தம் செய்யவேண்டும்.
தேவையா இது?

அமெரிக்கா, NATO மற்றும்  UNO வுக்குமாற்றங்கள் தேவைசொல்லுவது;

ஒரு சதாம் ஹுசைனை பிடிக்க முழு ஈராக்கையும் அழித்து, ஈராக் மக்களை அகதியாய், ஏழையாய், அநாதைகளாய், அங்கவீனர்களாய் மாற்றியது போல் லிபியாவை மாற்ற முயற்சிக்க வேண்டாம்,

கதாபி என்கின்ற சர்வதிகாரியிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றால் முதலில் குண்டு மழை அல்ல தீர்வு.

அப்படியென்றால் அங்கிருந்து மக்களை அகற்ற வேண்டும், அல்லது லிபிய மக்கள் மீது அதிக ஆர்வம் இருந்தால் அவர்களை உங்களுடைய நாடுகளுக்கு மீட்டெடுங்கள், பின்னர் யுத்தம் பற்றி சிந்திக்கலாம்.

இதனை எப்போதும் செய்ய மாட்டீர்கள் என்பது அறிந்ததே.

லிபியா மக்கள் பாதுகாக்கப்படுவதற்கு நான் அனைவரும் பிரார்த்திப்போம்.

நன்றி
நண்பர் இஸ்ஸுத்தீனின் வலைப்பூவிலிருந்து....


--
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (سورة المائدة:2 (
……”நீங்கள் நன்மையிலும்இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)

……and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting (Al-Maaida-2)

ஊழல் கண்காணிப்பு எஸ்.எம்.எஸ். திட்டத்துக்கு வரவேற்பு'

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் செல்பேசி மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் வசதிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆர்.ஸ்ரீகுமார் தெரிவித்தார். 
 

சென்னையில் இன்று ஊழல் ஒழிப்பு ஆய்வுக் குழுவின் தமிழக மையத்தை முதன்முதலில் துவக்கி வைத்து பேசிய போது அவர் இதை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "ஊழல் கண்காணிப்பு முக்கிய மேலாண்மை பொறுப்பாகும். தலைமை நிர்வாகிகளும், தலைமை கண்காணிப்பு அலுவலர்களும் இணைந்து இதை செயல்படுத்த வேண்டும்

ஊழல் ஒழிப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.  ஊழலை ஒழிக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.  ஒவ்வொருவரும் இதில் முழு மனதுடன் ஈடுபட்டால் ஊழலை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.  ஊழல் இன்று ஒரு முக்கிய பிரச்சினையாக நம்மிடையே உருவெடுத்துள்ளது. 

மேலாண்மை பொறுப்பில் உள்ளவர்கள் இதை முற்றிலுமாக ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  ஊழல் தடுப்புப் பிரிவில் "vigeye" என்ற குறிப்பிட்டு 1964 என்ற எண்ணில் குறுஞ்செய்தி மூலம் பதிவு செய்து கொண்டால் எங்கெங்கு ஊழல் நடைபெறுகிறதோ அதை அவ்வப்போது ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு உடனடியாக தெரியப்படுத்த முடியும்.  (முழுமையாக அறிய... http://www.vigeye.com/

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் செல்பேசிகள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பும் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.  இதுவரை இந்த வசதியை பயன்படுத்துவதற்கு 4000 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.  இதுவரை 500 புகார்கள் வந்துள்ளன.  இந்த வசதியின் மூலம் செல்பேசி மூலம் படங்களை எடுத்தும், ஒலிப்பதிவு செய்தும் உடனடியாக ஆணையத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.  எங்கு எப்போது நடந்தது என்பதற்கான தகவல்களை இந்த பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.  இது தற்போது பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது," என்றார் ஸ்ரீகுமார் கூறினார்.

மத்திய ஊழல் ஒழிப்பு ஆய்வுக் குழு ஐதராபாதை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இதன் தமிழக மையம் இன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது. 

இந்த மையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரிவுப்படுத்தப்படவுள்ளது.  ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை இரு மாநிலங்களிலும் மேம்படுத்தவும், இதுதொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் தமிழகத்தில் இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ள


http://www.vigeye.com/register_mobile_init.php

அ.தி.மு.க கூட்டணிக்கே வெற்றி-ஆனந்த விகடன் கருத்து கணிப்பு முடிவுகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் சுமார் 2081 வாக்காளர்களிடம் ஆனந்தவிகடன் தனது மாணவ பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது...இன்றைய ஆனந்த விகடனில் அதன் ரிசல்ட் வெளியாகி இருக்கிறது.....


அதிலிருந்து சில முக்கிய குறிப்புகள்;

ஜெயலலிதாவின் ஆணவ போக்கால் வெற்றியின் சதவீதம் குறைந்திருக்கிறது..ஆனால் தோல்வி அடையும் அளவு இல்லை.

ஜெயலலிதா கூட்டணிகட்சியினரிடம் நடந்து கொண்ட விதம் நடுநிலையாளர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது...

தலை நகரை விட்டு தலை தப்பிச்சா போதும் னு முதல்வரே திருவாரூருக்கு ஓடுகிறார்...அவருக்கே எலெக்சன் ரிசல்ட் எப்படி இருக்கும்னு புரிஞ்சிருச்சு அதை பயன்படுத்திக்காம வெற்றி பெறுவோம் என்கிற மமதையில ஜெயலலிதா தப்பான முடிவுகளை எடுத்திட்டார்..அவரை பார்த்து இப்போ பரிதாபப்படக்கூட முடியலை என்றாராம் ஸ்ரீரங்கத்துகாரர்....

ஸ்பெக்ட்ரம் விவகாரம் இந்த தேர்தலில் சிறிதளவே தாக்கத்தை ஏற்படுத்தும்...ஸ்பெக்ட்ரம் விவாகாரத்தை நினைத்து சுமார் 46 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்றார்களாம்...

உசிலம்பட்டியில்,அந்தம்மா வந்தா சட்டம் ஒழுங்கு சரியா இருக்கும்,அதிகாரிங்க பயப்படுவாங்க...நிர்வாகம் சரியாக இருக்கும் அதனால எங்களுக்கு என்ன பிரயோஜனம்..கலைஞர் வந்தா மிக்ஸி கிரைண்டர் கிடைக்கும் அவருக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்களாம்

யார் நல்லாட்சி தருவார்கள் என்ற கேள்விக்கு கலைஞரை விட ஜெயலலிதாவே அதிக மதிப்பெண் பெறுகிறார்....



சர்வே ரிசல்ட்

ஐந்து ஆண்டு கால தி.மு.க அர்சின் இலவச திட்டங்கள்..சாதனைகள்..?

1.எல்லாமே மக்கள் வரிப்பணம்தானே..?-47.09 சதவீதம் மக்கள்
2.பயனுள்ள திட்டங்கள்-27 சதவீதம் மக்கள்


அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்திருப்பது..?

கூட்டணிக்கு பலம்..-70.78 சதவீதம் மக்கள்

எந்த மாற்றமும் நடக்காது -20 சதவீதம் மக்கள்


யார் நல்லாட்சி தருவார்கள் என்று நினைக்கிறீர்கள்..?

கருணாநிதி-28.54 சதவீதம் மக்கள்

ஜெயலலிதா-33.25 சதவீதம்

இருவருமே இல்லை-38.25

யாருக்கு வாக்களிப்பீர்கள்..?

தி.மு.க கூட்டணி-34.60 சதவீதம் மக்கள்

அ.தி.மு.க கூட்டணி-44.26 சதவீதம் மக்கள்.

.வைகோ அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது மக்களிடையே பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது..பலர்,இது வைகோவுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றே கருத்து தெரிவித்துள்ளனர்..

கருணாநிதியின் ஹோம் கேபினெட்! ---ஆனந்த விகடன்-

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி


 
 
 
 
 
 
 
 
 
 
ட்சித் தலைவராக கணாநிதிருயைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
 
( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?) 


ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!


கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!



42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
 

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.



1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு.



இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.



கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். 


தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!



குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள். 



ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.



ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.


கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.


பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.



தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!



டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. 

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!



இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!



 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!


 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!



 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!



 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!



 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!



 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!




  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!



கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!



 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. 



ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். 

தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!



__._,_.___