Saturday, March 19, 2011

விக்கிலீக்ஸ்:அணுசக்தி ஒப்பந்த நிலைப்பாட்டில் பாஜக-வின் இரட்டை நாக்கு

 

imagesCA9TAAPV
டெல்லி:ஆட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாடு என இரட்டை வேட நிலைப்பாட்டுடன் பாஜக செயல்படுவதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-இந்தியா அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அத்வானியின் பேச்சுக்கள் மற்றும் அவர் நடந்து கொண்ட முறையை மேற்கோள்காட்டி, அமெரிக்க தூதரக ஆவணங்களில் பகிரப்பட்டிருப்பதை  விக்கிலீக்ஸ் முலம் கிடைத்த தகவல் மூலம் ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே 13-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முதல் நாள் பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானியைச் சந்தித்தித்துள்ளார் அமெரிக்க தூதரக உயர் பொறுப்பில் இருந்த பீட்டர் பர்லீக்.
அப்போது, “பாஜக ஆட்சியில் அமர்ந்தால், அமெரிக்கா – இந்தியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது,’ என்று தன்னிடம் அத்வானி கூறியதை அதே நாளில் வாஷிங்டனுக்கு அனுப்பிய கேபிளில் குறிப்பிட்டுள்ளார் பீட்டர்.
“எல்.கே.அத்வானி, பாஜக தலைமையிலான அரசு அமைந்தாலும் அமெரிக்கா-இந்தியா இடையிலான வலுவான உறவு தொடரும் என்று கூறினார்.” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவுடனான உறவு தொடர்பான பாஜக நிலைப்பாட்டின் தன்மையை 2005-ம் ஆண்டு டிசம்பரில் வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட கேபிளில் விவரிக்கப்பட்டுள்ளது.
“மும்பையில் 2005 டிச.26,27 -ல் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமெரிக்காவின் அடிமையாக செயல்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றியது.
ஆனால், மறுநாள் டிச.28-ல் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பாஜக தேசிய செயற்குழு தலைவர் சேஷாத்திரி ‘சாரி, பாஜகவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான தீர்மானத்தை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது சும்மா ஒரு பேருக்காக வெளியிடப்பட்டது” என்று தன்னிடம் சேஷாத்திரி கூறியதாக ராபர்ட் பிளேக் அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலின் மூலமாக அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை பாஜக எதிர்ப்பது உறுதியாகிறது என்றும், உண்மையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரே விதமான இறக்கைகள் கொண்ட பறவைகள் என்றும் விக்கிலீக்ஸ் வர்ணித்துள்ளது.

No comments:

Post a Comment