இஸ்லாமிய அரசான கிலாஃபாவானது, முஸ்தஃபா கமாலின் சீரிய முயற்சியின் மூலம்வீழ்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு,
இஸ்லாத்தின் தலைமையகமாக இருந்து உலகினை ஆட்டிப்படைத்த துருக்கி இப்பொழுது ஒரு சாதாரண பால்கன்நாடாக வீழ்ந்து விட்டது.
என "தி டைம்ஸ்" நாளிதழ், மார்ச் 1924ல் குறிப்பிட்டது. அந்த வீழ்ச்சியின் பின்பு வேறுஎந்த முயற்சியும் செய்யாமல் காத்திருந்த முஸ்லிம் உம்மா, இன்று அதன் விளைவுகளைசந்தித்து வருகிறது.
பால்கன் (Balcan)நாடுகளான போஸ்னியா, கொஸோவோ ஆகிய நாடுகளில் முஸ்லிம்பெண்கள் கொடுமைக்காளாக்கப்பட்டு இழிவுபடுத்தப்படுவதை பொறுக்க முடியாமல் மரங்களில் து}க்கில் தொங்கிய காட்சியை என்னவென்பது. விளை நிலங்களில் விதைகட்குப்பதிலாகமுஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்ட ஸெரிபரேனியாவை மறந்துவிடமுடியுமா? இவைஅனைத்தும், முஸ்லிம்களை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்ட ஐ.நா. படைகளின் நயவஞ்சகவார்த்தையில் ஏமாந்த முஸ்லிம்கட்கு இழைக்கப்பட்ட கொடுமைகளாகும்.
பால்கன் தேசத்தை இஸ்லாமிய தேசமாக்கிய சுல்தான் முராத் அவர்களின் வழி வந்தோர்மிக அருகிலுள்ள வளைகுடாப் பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பொழுதும் அவர்கள்பாராமுகமாக இருப்பது, சுல்தான் முராத் அவர்களை மட்டுமன்றி, இஸ்லாத்தையேஇழிவுபடுத்துவாகவே உள்ளது. போர்வைகளையும், உணவுப் பொட்டலங்களையும், குர்ஆனையும்அனுப்புவோர், எதிரிகளிடமிருந்து முஸ்லிம்களின் உயிர்களை காக்கின்ற போர்ப்படையினைகட்டிவைத்துவிட்டது ஏனோ?
பொருளாதாரத் தடையின் மூலம் ஈராக் நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள்இறந்தபோதும் இவ்வுலகம் பாராமுகமாக இருந்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றபோர்வையில் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் கொன்றுகுவிக்கப்படும் போதும் எவரும் கேட்பாரில்லை.
இந்நிலையில், உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவருமே பாதுகாப்பற்ற ஒரு நிலையிலேயேஉள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகட்கு அவர்கள் வெகு எளிதாக இரையாவதை உணரமுடிகிறது.பாலஸ்தீன், ஈராக், போஸ்னியா, ஆப்கானிஸ்தான், செசன்யா, கொசோவோ, காஷ்மீர்,சோமாலியா, குஜராத் என உதாரணங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.முஸ்லிம்களையும் அவர்களது நம்பிக்கையான இஸ்லாமையும் கேலிக்கும் கொடுமைக்கும்ஆளாக்குகின்றனர்.
சமீபத்தில் நபிகளாரைப் பற்றிய கேலிச்சித்திரத்தை ஐரோப்பாவின்நாளிதழ்கள் வெளியிட்டது, அமெரிக்க ராணுவம் குர்ஆனை இழிவுபடுத்தியது, இதைப்போன்ற பலநிகழ்ச்சிகள். அபு க்ராயிப் சிறையில் முஸ்லிம்கள் அனுபவித்த, அனுபவிக்கின்ற கொடுமைகள்,பிரான்சு தேசம் எடுக்கின்ற ஹிஜாப் அணிதலுக்கு எதிரான நடவடிக்கை என நாளுக்கு நாள்,இஸ்லாத்திற்கும், முஸ்லிம்கட்கும் எதிரான காழ்ப்புணர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இந்த நிலையிலும், இஸ்லாமிய நிலங்களை ஆட்சிசெய்கின்றோர் எவ்வித நடவடிக்கையும்எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு நாளடைவில் முஸ்லிம்களின் மனதில் ஒருவித விரக்திதோன்றியிருக்கிறது. அவர்களின் நம்பிக்கையும் சிறிது சிறிதாக வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது.இன்றைய இஸ்லாமிய உலகானது, ஒற்றுமையின்மை, பாதுகாப்பின்மை, வீழ்ச்சி போன்றவற்றில்சிக்கி, ஒரு பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. உலக அரங்கில் இந்த நாடுகள் ஒருபொருட்டாக மதிக்கப்படவில்லை. எதிரிகளின் ஆதிக்கத்தில் கீழடங்கி இரண்டாம்நிலைநாடுகளாக வீழ்ந்தே கிடக்கின்றன. அதற்கும் ஒருபடி மேலாக அங்கு ஆட்சிப்பொறுப்பில்இருப்பவர்களும் எதிரிகட்கு கீழ்ப்படிந்து, இஸ்லாத்தை ஒதுக்கிவைத்து, அதனை எதிர்த்துப்போராடும் முஸ்லிம்களை கொடுமைக்குள்ளாக்குகின்றனர்.இந்தப் பரிதாப நிலையில் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் சில முக்கிய கேள்விகள்எழுவது இயற்கையே.
ஏன் இந்த இஸ்லாமிய சமுதாயம் பின்தங்கிய நிலையிலுள்ளது?
இஸ்லாமிய நிலங்களை ஆள்வோர் கொடுமைக்காரர்களாக இருக்கின்றனர். எந்தவிதவிசாரணையுமின்றி ஆயிரமாயிரம் முஸ்லிம்களை சிறைப்பிடிக்கக் காரணம் என்ன?இத்தகைய ஒடுக்கப்பட்ட சூழ்நிலையிலும் முஸ்லிம் உம்மாவிடையே ஒற்றுமையை காணஇயலவில்லை. முஸ்லிம் சமுதாயமானது ஒருவித குழப்ப நிலையிலும், வலுவிழந்தும்காணப்படுகிறது. உதாரணமாக, தமது எண்ணை வளம் மூலம் எரிசக்தியையும், அதன்விளைவான பொருளாதார சக்தியையும் உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திற்கும் வழங்குகின்றவளைகுடா நாடுகள், உலக அரங்கில் இரண்டாம்பட்ச நாடுகளாகவே கருதப்படுகின்றன.கோடிக்கோடியாக வருமானம் வருகின்ற பொழுதும், சிங்கப்பூர், கொரியா போலதொழிற்மயமாக்கப்பட்ட நாடாக ஆகாதது எதனால்? இத்தனை பணமும் எங்கே செல்கிறது?பூமியிலிருந்து கிடைக்கும் வளங்கள் முஸ்லிம் உம்மாவிற்கே சொந்தம் என நபிகளார்குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் உம்மாவின் நன்மைக்காகவே அவை செலவிடப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கே என்ன நடக்கிறது? ஏழை மக்களின் பசியைப் போக்கவோ, நாட்டைதொழிற்மயமாக்கவோ, ஆராய்ச்சிக் கூடங்கள் அமைக்கவோ, இராணுவ பலத்தை பெருக்கவோஇந்த செல்வம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்திற்கும் வளைகுடா நாடுகள் மேற்குலகிடமேகையேந்துகிறது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் முஸ்லிம் மக்கள் மீதுகுண்டுமழை பொழிந்த போதிலும் அந்த நாடுகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டு, ஒன்றும்செய்ய இயலாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றது. முஸ்லிம் நாடுகள் இப்படிஒற்றுமையின்றி பின்தங்கியிருப்பது எதனால்?
சூடான் நாட்டின் மக்கள் வளமும், விவசாய சக்தியும், சவூதி அரேபியாவின் பண பலமும்இணைந்து முஸ்லிம் உம்மாவின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு சிறந்தவிவசாயத்துறையை உருவாக்கியிருக்கவேண்டும். எகிப்திய தொழிற்துறை அறிவு நேர்த்தியும்,வளைகுடா நாடுகளின் செல்வமும் இணைந்து தொழிற்துறையில் மேற்குலகைமிஞ்சியிருக்கவேண்டும். அங்குள்ள மக்கள் வளத்தால் ஒரு சிறந்த படை உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதுபோல எத்தனையோ. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. மார்க்கம், பண்டையவரலாறு, மொழி, சிந்தனை என எல்லாவற்றிலும் ஒற்றுமை இருந்தும், இந்த முஸ்லிம் உம்மாபிளவுபட்டுநிற்பதேன். எல்லாவற்றையும் சுருக்கி ஒரே வரியில் கூறுவதென்றால்,நபிகளார் மூலம் வழிகாட்டப்பட்ட இந்த இஸ்லாமிய சமுதாயம் இன்று மிகவும் பலவீனமாக இருப்பதேன்?
முஸ்லிம்களின் பலவீனமான நிலை இயல்பானது அன்று. மேலும் நிச்சயமாக நமதுநிலைக்கு இஸ்லாம் காரணமன்று. மாறாக முஸ்லிம்களின் இன்றைய நிலைக்கு காரணம், நாம்இஸ்லாத்தை பின்பற்றத் தவறியதேயாகும். நாம் ஒவ்வொருவரும் தனிநபராக முஸ்லிமாகஇருந்தபோதும், மொத்தத்தில் நமது சமுதாயத்தில் இஸ்லாம் இல்லை.இன்றைய முஸ்லிம் சமுதாயம் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றவில்லை. வாழ்வின்கொள்கைகள், சட்டதிட்டங்கள், சிந்தனைகள், அனைத்திலும் இஸ்லாம் அல்லாத ஒருகண்ணோட்டமே நிறைந்துள்ளது. இஸ்லாத்திற்கு விசுவாசமன்றி ஜஹிலியாவை(அறியாமை)விசுவாசிக்கிறோம். முதலாளித்துவம், மக்களாட்சி, தேசியவாதம், சுயலாபம் போன்றவைமுஸ்லிம்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. அவை முஸ்லிம்களின் மனதிலிருந்து இஸ்லாத்தைதுரத்திவிட்டன. முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப்படையில் சிந்திப்பதை விட்டும் விலகிமேற்குலகின் கொள்கைகளின் அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
1924ல் கிலாஃபாஅரசு வீழ்ந்த பிறகு இஸ்லாமிய சட்டங்களும் இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்டன. இறைவன்கட்டளையிட்டுள்ள ஷாPஆ, வாழ்வை விட்டும் மறைந்துவிட்டது. இதுவே நமது பலவீனத்திற்கும்,பின்தங்கிய நிலைக்கும் காரணமாயிற்று.கிலாஃபாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இஸ்லாமிய நிலங்கள், இங்கிலாந்து, பிரான்சு போன்றநாடுகளின் காலனி ஆதிக்கத்திற்குள்ளாயின. அதன் மூலம் அந்த ஐரோப்பிய நாடுகள் தங்களின்முதலாளித்துவக் கொள்கையை மெதுமெதுவாக அனைத்துத் துறைகளிலும் புகுத்தின. முடிவில்இஸ்லாமிய நிலங்கள் அனைத்தும் மேற்கத்திய முதலாளித்துவக் கொள்கையின்அடிப்படையிலேயே ஆட்சிசெய்யப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் நாட்டின் மிக முக்கியபொறுப்புகளை வகித்த மேற்கத்தியப் பிரதிநிதிகள், நாகரிகமயமாக்கல் என்ற போர்வையில், (மீடியா) வாயிலாக, முஸ்லிம் சமுதாயத்தில், மேற்கத்திய கொள்கைகளைதிணித்தனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால் காலனி ஆதிக்க நாடுகட்கு பின்னடைவுஏற்பட்டது. போருக்கான பெரும் பொருட் செலவை சமாளிக்க வேண்டி வந்தது, மேலும்,சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய நாடுகள் காலனி ஏகாதிபத்யத்திற்கு கடும் எதிர்ப்புத்தெரிவிக்கலாயின. அதனால் ஆதிக்க நாடுகள் தமது காலனி நாடுகட்கு விடுதலை அளித்துஅவற்றை விட்டும் வெளியேறின.
இவ்வாறாக சுதந்திரம் பெற்ற நாடுகள் புதிய தலைமுறைஆட்சியாளர்களின் கீழ் வந்தன. அவர்கள் முந்தைய காலனி ஆதிக்க நாடுகளின்பிரதிநிதிகளாகவே செயல்பட்டனர். அதன் மூலம் காலனி ஆதிக்க நாடுகளால் தமது மறைமுகஆட்சியை தொடரமுடிந்தது.தமது நாட்டை சீர்திருத்துவதாகவும், முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகவும் கூறி,இந்த ஆட்சியாளர்கள், இஸ்லாத்தை விலக்கி மற்ற அனைத்துக் கோட்பாடுகளையும்அரவணைத்துச் சென்றனர். ஆனால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது.
அதாவதுஊழலும், அடக்குமுறையும் வியாபித்தன. அந்நாடுகள் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதில்மட்டுமே வெற்றி கண்டன. அந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், மேலும் மேலும்,இஸ்லாத்தின் எதிரிகளை சார்ந்திருக்கும்படியே அமைந்தன.மொத்தத்தில், அத்தகைய இஸ்லாம் அல்லாத மதச்சார்பற்ற கொள்கைகள் முஸ்லிம்களைமேற்கத்திய மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளின் அடிமைகளாகவே மாற்றின.
ஆதிக்க நாடுகட்குஎதிரான சுதந்திரப் போராட்டத்தில், மக்களை ஒன்று சேர்த்து இயக்கிய ஒரு சக்திஇஸ்லாமேயாகும். இருந்தபோதிலும் சுதந்திரம் அடைந்த பின்பு, அதற்காகப் பாடுபட்டமுஸ்லிம்கள் நிராகரிக்கப்பட்டு, மதச்சார்பற்ற, காலனி ஆதிக்க நாடுகளின் கைப்பாவைகள்ஆட்சியில் அமர்ந்தனர். பாகிஸ்தான், துனிசியா, அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்தநிலையைக் காணலாம். ஆனாலும் முஸ்லிம்கள் தமது போராட்டத்தை கைவிடவில்லை.முன்னேற்றப்பாதையில் செலுத்துவதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள் தங்கள் முயற்சியில்தோல்வியுற்றதை இந்த முஸ்லிம்கள் மக்களிடைய எடுத்துரைத்தவண்ணம் உள்ளனர். இந்தமுஸ்லிம்கள் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களின் அரசியல் கொள்கைகளை எதிர்த்துப் போராடி,முஸ்லிம் உம்மாவிற்கெதிரான சூழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையேஏற்படுத்தியவண்ணம் உள்ளனர்.
இஸ்லாம் அல்லாத பிற கொள்கைகளின் தோல்வியைக் கண்ணாரக் காண்கின்றமுஸ்லிம்கள், தமது பின்னடைவிற்கு ஒரே நிவாரணியாக இஸ்லாம் மட்டுமே இருக்கமுடியும் எனஉணரலாயினர். அதனால் கடந்த இருபதாண்டுகளில், உலகிலுள்ள முஸ்லிம்கள் இஸ்லாத்தின்பக்கம் திரும்பலாயினர். அரேபியர்கள், துருக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், ஆப்பிரிக்கர்கள் எனபல்வேறு பிரிவுகளாக பிளவுண்டுகிடந்தோர், முஸ்லிம்கள் என உணர்ந்து, இஸ்லாத்தின்சட்டதிட்டங்களை கற்றறிய ஆரம்பித்தனர். அதன் விளைவாக சமூகம், நாடு மற்றும் தனிமனிதஒழுக்க நெறிகளை முறைப்படுத்த, இஸ்லாமிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒருபோராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராளிகளின் மன உறுதியும், அவர்கள் எடுத்துறைக்கும்கொள்கைகளும், அரியணைகளையே ஆட்டம்காணச் செய்தன.
அச்செய்தியானது இஸ்லாமியநிலங்களை ஆள்வோரிடையே மட்டுமன்றி, மேற்குலக அரசுகளின் மத்தியிலும் ஒரு அச்சத்தை உண்டு பண்ணியது. எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாத்தை மீண்டும் மலரச் செய்ய முடியும்என்ற புதிய செய்தியை, நம்பிக்கையை, அனைத்து முஸ்லிம்கள் மனதிலும் ஏற்படுத்தியது. நமதுபிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில்புரிந்துகொண்டு, அந்தத் தீர்வை நபிகளாரின் பாதையில் சரியானபடி செயல்படுத்த நாமும் ஒருமுக்கியப்பங்காற்ற வேண்டும் என்பதே இன்றைய அவசியத் தேவையாகும்.

No comments:
Post a Comment