Sunday, March 20, 2011

இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் – எகிப்து நீதிமன்றம்

 

QNA_IsraelEgyptGas104815032
ஷரமுல் ஷேக்:எகிப்து-இஸ்ரேல் எரிவாயு ஒப்பந்தம் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருக்கவே எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த வேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் மக்களுக்கு போதுமான எரிவாயு இருப்பதை உறுதிச் செய்யாமல் ஏற்றுமதிச் செய்யக் கூடாது என எகிப்து நீதிமன்றம் அந்நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதி எதிர்ப்பு பிரச்சாரக் குழுவின் தலைவர் இப்ராஹீம் யூஸ்ரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இஸ்ரேல் எதிரி நாடாகும். அந்நாட்டுடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளக் கூடாது என பெரும்பாலான எகிப்தியர்களும் நம்புகிறார்கள்.
அமெரிக்காவின் தலைமையில் கடந்த 1979-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் முக்கிய விஷயம் இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதியாகும்.
2005-ஆம் ஆண்டில் இஸ்ரேலும் எகிப்தும் 250 கோடி டாலருக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு குறைந்த விலையில் எரிவாயு கிடைத்து வருகிறது.
இஸ்ரேலுக்கான எரிவாயுவில் 40 சதவீதமும் எகிப்திலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகிறது. ஆனால், எரிவாயு தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இஸ்ரேலுடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்ற கோரிக்கை எகிப்தில் வலுவடைந்து வருகிறது.
முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு உள்பட எதிர்கட்சியினர் இக்கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment