அதிமுக தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுர சட்டமன்ற வேட்பாளர் பேரா. டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் உயர்ந்த ஒழுக்க நெறிகளை மூச்சாய் கொண்டவர்,சமூகங்களிடையே உறவுப் பாலம் அமைக்கும் சமரச, சமத்துவக் கருத்தாளர்.
முடங்கிக் கிடக்கும் மக்களை முன்னேற்றுவதற்கு முப்போதும் சிந்திக்கும் மூளை உழைப்பாளர், பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்திய பண்புள்ள பேராசிரியர். பரபரப்பானஅரசியல் அலுவல்களுக்கு இடையிலும் வட்டியில்லா வங்கிமுறை குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
பள்ளிப் பருவம் முதலே உன்னத ஒழுக்க மாண்புகள் மீது ஈர்ப்பு கொண்ட இவர், சமூகத் தீமைகளுக்கு எதிராக. அறிவார்ந்த கருத்துகளுக்கு ஆதரவாகக் களப்பணி ஆற்றினார். கல்லூரி மாணவப் பருவத்தில் மது போதை. ஆபாசம். வட்டி. வரதட்சணை போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் பேரணிகள் நடத்தி பிரச்சார யுத்தம் தொடுத்தார்.
அடக்குமுறைக்கு எதிராக. ஒடுக்கப் பட்டோர் குரலாக 1995ம் ஆண்டு உதயமான தமுமுகவின் தலைமைப் பொறுப்பேற்று, சிறுமைகளை தகர்த்து, உரிமைகளை மீட்க உக்கிரப் பணி செய்தார்.
சமூக நீதி மீட்கும் தமுமுகவின் நெடிய பயணத்தில் இவர் ஒரு ரயில் என்ஜினாய் இருந்தவர். இறையுணர்வும். மனத்தூய்மையும் இவரை இயக்கும் சக்திகள்.
ஐ.நாவில்...
2002ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மைபணிக்குழுவின் 13வது மாநாட்டிற்கு இந்தியச் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதியாக இவர் கலந்து கொண்டார்.
- குஜராத்தில் நடைபெற்ற கொடூரமான முஸ்லிம் இனப்படுகொலைகளை ஐநாவில் பதிவு செய்ததோடு. தமிழகத்தில் திருச்சி அருகேயுள்ள திண்ணியம் கிராமத்தில் தலித்கள் மலம் தின்ன வைக்கப்பட்டக் கொடுமையையும் ஐ.நா மன்றத்தில் பதிவு செய்தார்.
- தலித்களுக்கான இடஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த, இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜியின் கருத்தை. அழுத்தமாக மறுத்து சமூகநீதியின் அவசியத்தை எடுத்துரைத்து இவரது ஜெனிவா பயணத்தின் மைல்கல்.
ஈர்ப்பு விசையுள்ள எழுத்தாளர்....
சமூக நீதிக் கருத்துகளைப் பத்திரிகைகளில் பதிவு செய்து வருபவர். சுவையான தொடர்கட்டுரைகளுக்கு சொந்தக் காரர்.
அவர்கள் எரிகிறார்கள், ஆல்ப்ஸ் மலையின் நிழலில், தித்திப்பான திருப்பு முனைகள் ஆகிய கட்டுரை தொடர்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவரது கட்டுரைத் தொடர்கள் நூல்களாக வெளிவந்து வாசக நெஞ்சங்களின் வாழ்கின்றன.
ஊடகங்களில்....
- தொலைக்காட்சி விவாதங்களில் விவாதங்களில் பலமுறை பங்கேற்று, சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் இன்னபிற ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நியாயங்களைத் தெளிவாகவும். வலிவாகவும் எடுத்துரைத்தவர்.
- .பாபர் மஸ்ஜித் விவகாரம் தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஆர்.எஸ்.எஸ் தென்பாரதச் செயலாளர் சண்முகநாதனுடன் இவர் நடத்திய விவாதம் தமிழ் கூறும் நல்லுகமெங்கும் உள்ள நியாயவான்களை இவர்பால் ஈர்த்தது.
- தமிழன் எக்ஸ்பிரஸ் இதழின் சிறப்புக் கேள்வி பதில் பகுதியில் பல வாரங்கள் பதிலளித்து வந்தார்.
பிற சமுதாய மக்களுக்காக....
- 1996ம் ஆண்டு கொடியன்குளத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக, தமுமுக மாபெரும் இயக்கம் நடத்தியது.
- பாதிரியார் கிரஹாம் ஸ்டென்ஸ் அவரது பிள்ளைகளோடு உயிருடன் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலமெங்கும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
- .மத்திய பிரதேசம் மாநிரம் ஜெôஹ்பாவில் கன்னியாஸ்திரிகள் மானபங்கம் செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட்டம்.
- ஒரிசா கந்தமாலில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்ததுடன், கருத்து கூறாமல் இருந்த கலைஞரின் மௌனத்தைக் கலைத்தது.
- காயர் லாஞ்சி, உள்ளிட்ட பல இடங்களில் தலித்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை தொடர்ச்சியாகக் கண்டித்துப் பேராடி வருதல் எனச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.
இந்தியா டுடேயின் விருது...
சமுதாயப் பணிகளால் ஆழமானத் தாக்கம் ஏற்படுத்திய 15 பேரை இந்தியா டுடே இதழ் தேர்ந்தெடுத்தது. சிகரம் தொட்ட 15 என்ற விருது வழங்கியது. அவ்விருதுக்கு பேராதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்.
ஆயினும் இந்தியா டுடே தவறான செய்திகளை வெளியிட்டு சமூகக் குழப்பம் ஏற்படுத்திய போது விறுகொண்டு எதிர்த்தது தமுமுக.
மனிதநேயச் சேவையில்...
- 2006ம் ஆண்டு டிசம்பர் 26, சுனாமி என்ற ஆழிப்பேரலை, தமிழகக் கடலோரங்களைத் தகர்த்து. ஆயிரக்கணக்ôன உயிர்களைக் குடித்த போது, உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியாற்றியது தமுமுக.
- எல்லாம் இழந்து நின்ற மீனவ மக்கள் மற்றும் கடலோரங்களைத் தகர்த்து. ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தபோது. உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியாற்றியது தமுமுக.
- எல்லாம் இழந்து நின்ற மீனவ மக்கள் மற்றும் கடலோர மக்களை நீண்ட நாட்கள் முகாம்களில் தங்க வைத்து. உணவு, உடை, மருத்துவம், அனைத்தையும் இலவசமாக வழங்கி அரும்பெரும் சேவையாற்றியது தமுமுக.
- ரத்ததான சேவையில் தொடர்ந்து மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது.
- 65க்கும் மேற்பட்ட அவசர உதவி ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது தமுமுக.
- கல்வி உதவி. மருத்துவ உதவி என சேவைச் சிறகுகள் விரிகின்றன மனிதநேயத்தின் சிகரம் தொடுகின்றன.
சமுதாயச் சேவைகளை சிந்தனையாலும், செயல்பாட்டாலும், முடுக்கி விடும், பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ். மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கை வடிவமாய் இராமநாதபுரத்தில் தொகுதியில் போட்டியிடுகிறார்.
No comments:
Post a Comment