Friday, March 18, 2011

தேர்தல் சுவர் விளம்பரம் எலுத வீட்டின் உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டும்

உள்ளாட்சிகளில் தங்கள் வீட்டு சுவர்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றாலும் தேர்தல் அலுவலரின் அனுமதியைப் பெற்ற பிறகே எழுத வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கடுமையாக கண்காணித்து வருகிறது.
தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. தினசரி ஏதாவது ஒரு உத்தரவையும்கட்டுப்பாட்டையும் கொண்டு வருகிறது.
அரசுக் கட்டடங்களில் மட்டும் தேர்தல் விளம்பரங்கள் எழுதக் கூடாது என்றிருந்த நிலையில்தனியார் கட்டடங்களில் எழுத வேண்டுமானால் அந்த வீட்டின் உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது நகராட்சிபேரூராட்சிகளில் சுவர் விளம்பரங்கள் எழுதவேக் கூடாது என்றும்ஊராட்சிப் பகுதிகளில் வீட்டின் உரிமையாளரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரின் அனுமதியை பெறுவதுடன்அந்த ஒப்புதல் கடிதத்தைதேர்தல் அலுவரிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.
வீட்டின் உரிமையாளரே தங்கள் சுவற்றில் தேர்தல் விளம்பரம் எழுத வேண்டும் என்றாலும்முறையாக தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பிறகே எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதனால் விளம்பரங்கள் எழுதுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறினால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் தெரிவிக்கலாம்.
 சென்னை புறநகர் பகுதிகளில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விதிமுறைகளை
 மீறி செயல்பட்டால் 90424 00100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் புகார் மையம் 24 மணி நேரமும் செயல்படும்.

No comments:

Post a Comment