23 Mar 2011
டெல்அவீவ்:உதவியாளரை வன்புணர்வுச் செய்த வழக்கில் முன்னாள் இஸ்ரேலிய அதிபர் மோஷே கட்ஸாவிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1990 ஆம் ஆண்டு மோஷே சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்த பொழுது தனது உதவியாளரான பெண்மணி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மோஷே குற்றவாளி என கடந்த டிசம்பரில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
2000-07 காலக்கட்டத்தில் அதிபராக பதவி வகிக்கும் பொழுது அலுவலகத்தில் இரண்டு பெண் அதிகாரிகளை பாலியல் ரீதியாக கொடுமைச் செய்ததாக பதிவுச் செய்யப்பட்ட வழக்கிலும் மோஷே குற்றவாளி என கண்டறியப்பட்டிருந்தது.
ஜோர்ஜ் கார என்ற நீதிபதி தலைமையிலான மூன்று நபர்களைக் கொண்ட பெஞ்ச் மோஷேவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 28 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
உயர் பதவியில் இருந்து கொண்டு மோஷே செய்த குற்றங்களை பட்டியலிட்ட அரசு தரப்பு,நீண்டகால சிறைத் தண்டனையை மோஷேவுக்கு வழங்க வலியுறுத்தியது.
“எனக்கும் அந்த பெண்களுக்கும் தெரியும். இவ்வழக்கு இட்டுக்கட்டப்பட்டது என. நீங்கள் தவறிழைத்துவிட்டீர்கள்” -தனக்கெதிரான வழக்கில் தீர்ப்பைக் கேட்டு 65 வயதான மோஷே அளித்த பதிலாகும் இது.
மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் 30 தினங்கள் கழித்து அவர் சிறையிலடைக்கப்படுவார்.
சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் வைத்தும், ஜெருசலமில் ஹோட்டலில் வைத்தும் தன்னை பாலியல் கொடுமைச் செய்ததாக பெண்மணி புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியதையடுத்து 2007-ஆம் ஆண்டு மோஷே ராஜினாமாச் செய்தார்.
Tnks thoothu
No comments:
Post a Comment