18 Mar 2011
இஸ்லாமாபாத்:இரண்டு பாகிஸ்தானியர்களை அநியாயமாக சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரியாக நடித்த சி.ஐ.ஏ உளவாளி ரேமண்ட் டேவிஸை ஈட்டுத் தொகையை பெற்றுவிட்டு விடுதலைச் செய்ததற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாகிஸ்தானின் பல நகரங்களிலும் கண்டன பேரணிகள் நடைபெற்றன. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐவும், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏவும் மேற்கொண்ட ரகசிய உடன்பாட்டின் அடிப்படையில் ரேமண்ட் டேவிஸ் விடுதலைச் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
குற்றவாளியிடமிருந்து ஈட்டுத்தொகை வாங்க கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் விடுதலைச் செய்யப்பட்ட ரேமண்ட் டேவிஸை அழைத்துக்கொண்டு அமெரிக்க விமானப்படை பிரிவு ஆப்கானிஸ்தானிற்கு சென்றுள்ளது. அங்கிருந்து டேவிஸ் அமெரிக்காவிற்கு செல்வார்.
டேவிஸ் விடுதலைச் செய்யப்பட்டதைக் கண்டித்து முல்தானில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கையை புறக்கணித்தனர். தஹ்ரீக்-இ-இன்ஸாப், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகிய கட்சிகள் கண்டனப் பேரணிகளுக்கு தலைமை வகித்தன.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை நிர்பந்தபடுத்தியதால் டேவிஸின் விடுதலை நாட்டின் சட்டங்களை மீறுவதாகும் என சுட்டிக்காட்டி வழக்கறிஞர் இக்பால் ஜஃபரி லாகூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
No comments:
Post a Comment