Wednesday, March 23, 2011

இந்த ஆண்டு இறுதியில் பதவி விலகுகிறேன் – யெமன் அதிபர்

 

r
ஸன்ஆ:அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்காக இவ்வாண்டு இறுதியில் பதவி விலகுவேன் என யெமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.  இதனை அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் பழங்குடியினத் தலைவர்களும், மூத்த அதிகாரிகளும், ராணுவ கமாண்டர்களும் கலந்துக் கொண்ட கூட்டத்தில் வைத்து இதனை ஸாலிஹ் தெரிவித்ததாக செய்தித் தொடர்பாளர் செய்தி ஏஜன்சியிடம் கூறியுள்ளார்.
ஆனால், அதிகாரத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஏராளமான நாடுகளில் யெமன் நாட்டு தூதர்கள் அதிபருக்கு எதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான், கத்தர், ஒமான், ஸ்பெயின், துபை ஆகியவற்றிற்கான யெமன் தூதர்கள் எதிர்ப்பாளர்களுக்கான ஆதரவை ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
ராணுவமும், பழங்குடியினத் தலைவர்களும் 32 ஆண்டுகளாக பதவியில் தொடரும் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக திரும்பியதையடுத்து பல்வேறு நாட்டு தூதர்களின் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு ஸாலிஹிற்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

Tnks thoothu

No comments:

Post a Comment