Friday, March 11, 2011

தனிநபர் வருவாயில் பின்தங்கிய தமிழகம்!

தனிநபர் வருவாயில் பின்தங்கிய தமிழகம்!

டெல்லி: தனிநபர் ஆண்டு வருமானத்தில் இந்தியாவிலேயே கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார், லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

கடந்த 2009-10ம் நிதியாண்டில், தனிநபர் ஆண்டு வருமானத்தில் கோவா மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. கோவாவில் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 719 ரூபாய்.

இந்த பட்டியலில் சண்டிகார் 1 லட்சத்து 20 ஆயிரத்து 912 ரூபாய் வருவாயுடன் இரண்டாம் இடத்தையும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 886 ரூபாயுடன் டெல்லி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

தொழில்துறையில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் 62 ஆயிரத்து 499 ரூபாய் மட்டுமே.

இந்தப் பட்டியலில் பீகார் மாநிலம் கடைசி இடம் பெற்றுள்ளது. இம்மாநிலத்தின் ஆண்டு தனிநபர் வருமானம் 16 ஆயிரத்து 119 ரூபாய்.

Tnks Thatstamil

No comments:

Post a Comment