19 Mar 2011

ஸன்ஆ:தலைநகரான ஸன்ஆவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கொடூரமாக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் கொடுங்கோல் அரசு நாடுமுழுவதும் அவசரச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பாதுகாப்பு படையினரும் மோதிக் கொண்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவசரச்சட்டத்தை பிரகடனப்படுத்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் தீர்மானித்ததாக ஏகாதிபத்திய அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார். அவசரச்சட்டத்தின் கால அவகாசம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கிடையே ஆயுதம் ஏந்தியவர்கள் கலந்துக் கொண்டதாக ஸாலிஹ் குற்றஞ்சாட்டுகிறார். நாட்டு குடிமக்களும், போராட்டக்காரர்களும் மோதிக் கொண்டதாக ஸாலிஹ் கூறுகிறார்.
யெமனில் நடந்த மோதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
No comments:
Post a Comment