Sunday, March 13, 2011

அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்




விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் முறைகேடு, ஆ.ராசா கைது, ஆட்சியில் கருணாநிதி குடும்ப  உறுப்பினர்களின் ஆதிக்கம்... இவையெல்லாம் கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அ.தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்’’  என்று அதிரடி சர்வேயை வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை.கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்,  ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

கடந்த 2004 தேர்தலில் இந்திய அளவில் ஒரு ‘மெகா சர்வே’யை நடத்தி அப்போது சோனியாகாந்தி  தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற முடிவை  இந்த அமைப்பு வெளியிட்டது. அதற்கடுத்து, 2006 சட்டசபைத் தேர்தலின்போது இழுபறி சீட்டுக்கள் பெற்று  தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்பு வெளியிட்டது.

தற்போதும் இந்த அமைப்பு கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசின் மீது வந்த விமர்சனங்கள்  பலவற்றை கேள்விகளாக்கி மக்களிடம் பதில்களைப் பெற்றுள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்க இந்த  அமைப்பின் தலைவர் என்.உமாதாணுவைச் சந்தித்தோம்.



“25 கேள்விகளுடன் மொத்தம் 60 ஆயிரம் படிவங்கள் நகல் எடுத்து தமிழகம் முழுவதும் மாவட் டவாரியாக உள்ள எங்கள் அங்கத்தினர்களுக்கு அனுப்பினோம். அங்குள்ள கல்லூரி மாணவர்கள், ஓய்வு  பெற்ற ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்களிடம் கொடுத்து மக்களிடம் அனுப்பி எடுக்கப்பட்ட சர்வே இது.  முதல் கேள்வியாக, ‘தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சிதான் என்று  நினைக்கிறார்களா?’  என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ‘ஆம்’ என்று வெறும் 5 சதவிகிதம் பேரும், ‘இல்லை’ என்று 95  சதவிகிதம் பேரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை மக்கள் விரும்புகிறார்களா?’ என்ற கேள்விக்கு, ‘இல் லை’ என்று 90 சதவிகிதம் பேரும், ‘ஆம்’ என்று 10 சதவிகிதம் பேரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ‘ரூபாய்க்கு  ஒரு கிலோ அரிசி  வழங்குவது கடத்தல் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா?’  என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று 80 சதவிகிதம் பேரும், மீதி 20 சதவிகிதம் பேர் இல்லை என்றும் கு றிப்பிட்டுள்ளார்கள்.

‘தி.மு.க. ஆட்சியே வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா?’ என்ற கேள்விக்கு மட்டும் 98  சதவிகிதம் பேர் ‘இல்லை’ என்றே கருத்துக் கூறியிருக்கிறார்கள். 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு க ருணாநிதி ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை 93.40 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள். ‘நிலமில்லா  ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் என்ற வாக்குறுதியை நிறை வேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள £?’, ‘தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓர் அணியில் திரளவேண்டும் என்று மக்கள் வி ரும்புகிறார்களா?’ போன்ற கேள்விகளுக்கு ‘ஆம்’ என்றே நூற்றுக்கு நூறு சதவிகிதம் பேர் ‘டிக்’ செய்தி ருக்கிறார்கள்.

எங்கள் சர்வேயின்படி, விலைவாசி உயர்வு, ஆ.ராசா மீது சுமத்தப்பட்டுள்ள 1.76 லட்சம் கோடி முறைகேடு,  திகார் சிறையில் ராசா அடைக்கப்பட்டிருப்பது, கருணாநிதி குடும்பத்தினரின் அதிகார ஆதிக்கம் ஆகியவை  மக்களிடம் வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கின்றன என்பது தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிராம மக்க ளுக்குத் தெரியாது என்றுதான் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.   ‘தமிழ்நாட்டிலிருந்து ஒரு மத்திய அமைச்சர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறாரே தெரியுமா?’ எ ன்று மறைமுகமாகத்தான் கேட்டோம். ‘நம்ம தமிழ்நாட்டுக்கே கேவலம்’ என்று தஞ்சாவூரில் ஒரு குக்கிராம  மக்கள் பொங்கி எழுகிறார்கள்.

இதே நிலைமைதான் கரூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, ராமநாதபுரம் போன்ற மாவட்ட கிராமங்களில்  மிகுதியாகக் காணமுடிந்தது. அவர்களிடம் இலவச டி.வி. பற்றி கேட்டால் ‘கேபிளுக்கு ‘ப்ரீ’ கொடுக்கலையே!’  என்று திருப்பியடிப்பதையும் காணமுடிந்தது.

‘இந்த முறை ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்களே?’ உங்கள் கோபம் இப்படியே இருக்குமா?’ என்று கேட் டால்... இன்னும் ஆவேசப்படுகிறார்கள். ‘கொடுக்கட்டும்... யார் வீட்டுப்பணம்... பணத்தை வாங்கிக்கொண்டு  நாங்க போட வேண்டியவர்களுக்குப் போடுவோம்’ என்கிறார்கள். இதுவரை 59 ஆயிரம் படிவங்கள்  எங்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. அதில் உள்ள பதில்களை ஆய்வு செய்து முடிவுகளை வைத்துப்  பார்க்கும்போது, 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்றே  தெரிகிறது.

இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் எடுக்கப்பட்டதாகும். இதற்குப் பிறகு தி.மு.க.வுடன்,  காங்கிரஸ் நடத்திய சீட்டுச் சண்டை, கொ.மு.க.வின் வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று  நாங்கள் நம்பவில்லை. எனினும், அதற்கும் ஒரு ‘மினி சர்வே’ நடத்திவிடலாம் என்று இருக்கிறோம்’’ என் றார் உமாதாணு.

‘இதில் தொகுக்கப்பட்டுள்ள கேள்விகள் எல்லாமே தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டு ள்ளதே? இதுவே ஒருவித எதிர்மறை கருத்துத் திணிப்பாக உள்ளதே?’ என்ற சில கேள்விகளை  உமாதாணு முன்பு வைத்தோம்.

“ஒவ்வொரு முறை நடைபெறும் ஆட்சியின் மீதும் மக்களும், மக்கள் மூலமாக ஊடகங்களும்  விமர்சனங்களை வைப்பது வழக்கம். அந்த அடிப்படையிலேயே கேள்விகள் தயாரிப்பது எங்கள்  பேரவையின் பணி. அந்த விமர்சனங்களுக்கு எதிர் விமர்சனத்திற்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறோம்.  பிரச்னைகள் அடிப்படையில்தான் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ‘ஓட்டுக்களை முடிவு செய்வதும்  பிரச்னைகளே’ என்பது எங்கள் கடந்த கால சர்வே அனுபவம்’’ என்றார் உமாதாணு.
கேயெஸ்வி

No comments:

Post a Comment