Wednesday, March 23, 2011

காஸ்ஸா மீது இஸ்ரேல் விமானத்தாக்​குதல்

 

Baqeri_d20110319090219780
காஸ்ஸா:ஃபலஸ்தீனில் காஸ்ஸாவின் மீது திங்கள் கிழமை இஸ்ரேல் மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 7 பேர் குழந்தைகளாவர். இதனை ஃபலஸ்தீன் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஸ்ஸாவின் வான்பகுதியில் பல மணிநேரமாக விமானங்களின் இரைச்சல் கேட்டதாக பி.பி.சி கூறுகிறது. காஸ்ஸா நகரத்திலும், எல்லையின் வடக்கு, தெற்கு பகுதியிலும் ஒன்பது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது இஸ்ரேல்.
ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஸ்ஸாவில் வர்க்‌ஷாப் மற்றும் சிமெண்ட் தொழிற்சாலையை லட்சியமாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக கூடுதல் விபரங்களை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை. தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஸ்ஸாவில் கட்டிடங்களிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஹமாஸ் இஸ்ரேலின் மீது மோர்ட்டார் தாக்குதலை நடத்தியிருந்தது. விமானத்தாக்குதல் என்பது காஸ்ஸா மக்களுக்கு புதிதல்ல. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையே நடந்த கடுமையான தாக்குதல் இது என கூறப்படுகிறது.

கடந்த 2009 டிசம்பர் மற்றும் 2010 ஜனவரி ஆகிய மாதங்களில் இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 1300 ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 13 இஸ்ரேலியர்கள் பலியாயினர்.

No comments:

Post a Comment