Thursday, June 30, 2011

25 பைசா, 50 பைசா நாணயங்கள் புதன்கிழமை முதல் செல்லாது!

டெல்லி: 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வரும் புதன்கிழமை முதல் செல்லாது.

பணவீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. அதிலும் குறிப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பே இல்லாமல் போய் விட்டது. 25 பைசா, 50 பைசாவுக்கு நாட்டில் எந்தப் பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவாகிவிட்டது.

இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந் நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் வரும் 20ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் இவை செல்லாக்காசாக உள்ளன.

இந்த நாணயங்களை வைத்திருப்போர் அதை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் இந்த நாணயங்களைக் கொடுத்து பணம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூட்டை மூட்டையாக இந்த நாணயங்களைக் கொண்டு வந்து காசாக மாற்ற ஆரம்பித்துள்ளனர் மக்கள்.

இந்தியாவிலேயே கேரளாவில் தான் 25 பைசா, 50 பைசா மாற்றம் அதிகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் 2 சிறப்பு கவுண்டர்களை திறந்துள்ளது ரிசர்வ் வங்கி.
Thtastamil

No comments:

Post a Comment