Wednesday, June 8, 2011

பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு?

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவுஉள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும்ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர்போலீஸ் டி.எஸ்.பி.டி.ஆர்.ஓ. உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு குரூப்-தேர்வு நடத்தப்படுகிறது. 2011-ம் ஆண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வில் பங்கேற்க தமிழகம் முழுவதுமிருந்து லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியுடையவர்களுக்கு தேர்வு அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் பெண்கள் உள்பட 1.35லட்சம் பேர் பங்கேற்றனர். இந்தத் தேர்வில் எளிதான கேள்விகளே கேட்கப்பட்டதாகவும்பெரும்பாலான கேள்விகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர்.
இந்த நிலையில் தேர்வில் ""பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவுஓரினச் சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆண்டு எது?'' உள்ளிட்ட கேள்விகள் தங்களை அதிர்ச்சி அடைய வைத்ததாக தேர்வு எழுதிய பலர் கூறினர்.
இதுகுறித்து சென்னை மையம் ஒன்றில் தேர்வு எழுதிய ரமேஷ்கனகராஜ் ஆகியோர் கூறியது:
தேர்வில் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதுமதுபானங்களை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுவது போல் அமைந்துள்ளது. இதுபோன்ற தூண்டல்களால் ஒரு சிலர் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடவும் வாய்ப்பு உள்ளது.
இதுபோல் ஓரினச்சேர்க்கை குறித்த கேள்விஓரினச்சேர்க்கைக்கு தில்லி உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளதை பிரகடனப்படுத்துவதைப் போலவும்அதுகுறித்து அறிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவது போலவும் அமைந்துள்ளது என்றனர்.
பொது அறிவுக்கான விஷயங்கள் எவ்வளவோ இருக்கும் நிலையில்இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் தவறான எண்ணங்களைத் தூண்டும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் தவிர்க்கவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment