சென்னை: விலை உயர்த்தப்பட்டதையடுத்து இன்று முதல் தனியார் ஆம்னி பஸ்கள் கட்டணங்கள் உயர்கின்றன.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.63 பைசா உயர்ந்துள்ளது. இதையடுத்து இதனையடுத்து தனியார் ஆம்னி பஸ் கட்டணங்கள் இன்று முதல் உயர்கின்றன.
ரூ.20 முதல் ரூ.50 வரை கட்டணம் உயரவுள்ளது. இது குறித்து ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் சங்க தலைவர் அப்சல் கூறுகையில்,
டீசல் விலை உயர்வாலும், அதிக வரி சுமையாலும் இந்தத் தொழிலில் இருந்து பலர் வெளியேறிவிட்டனர். ஒரு சில ஆபரேட்டர்கள் மட்டும் தான் பஸ் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
டீசல் விலை தற்போது ரூ.3.63 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பஸ்கள் கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஏ.சி. சொகுசு பஸ்களுக்கு ரூ.50ம், குளிர்சாதன வசதி அல்லாத மற்ற பஸ்களுக்கு ரூ.20 கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இன்று மாலையில் இருந்து இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மாலை நடக்கும் சங்க கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
அரசு பஸ் கட்டணம் உயராது-அமைச்சர்:
இந் நிலையில் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயராது என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அவர் கூறுகையில், பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டணமும் உயராது என்று முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில் டீசல் விலை உயர்ந்தாலும் அரசு பஸ் கட்டணம் உயராது.
ஏழை- எளிய மக்கள் அரசு பஸ்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அரசுக்கு இல்லை என்றார்.
டீசல் விலை ரூ.3 உயர்வால் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு ஒரு நாளைக்கு ரூ.52.65 லட்சம் கூடுதலாக செலவாகும் என்று தெரிகிறது.

Thatstamil
No comments:
Post a Comment