சென்னை : மனிதநேய மக்கள் கட்சிக்கு வந்தால் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் பாடுபடத் தயாராக இருக்கிறோம்,'' என, தமிழக முஸ்லிம் அமைப்புகளுக்கு, ம.ம.க., மாநில தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் சார்பில், தமிழக சட்டசபை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அமைப்பின் தலைவர் முகமது கான் பாகவி தலைமையில் பொதுச்செயலர் தர்வேஷ் ரஷாதி முன்னிலையில் சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
தமிழக சட்டசபை முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்களான ம.ம.க.,வைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, அஸ்லாம் பாட்ஷா, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முகமது ஜான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோரைப் பாராட்டி விழாவில் பலர் பேசினர். ம.ம.க., சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் விழாவில் பங்கேற்றனர். விழாவில் பேசிய ம.ம.க தலைவர் திரு ஜவாஹிருல்லா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இக்கட்டான காலத்தில் 1995ல் துவக்கப்பட்டது. இந்தியாவில், அதிக அளவில் ரத்ததானம் செய்த இயக்கத்தினர் த.மு.மு.க.,வினர் தான். சுனாமி பாதிப்பு தமிழகத்தில் ஏற்பட்ட போது, நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டோம்.
பின், மனிதநேய மக்கள் கட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கி, அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடுகிறோம். இந்த தேர்தலில் ம.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி, கட்சியினரின் உழைப்புக்கும், பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஆதரவுக் குரல் கொடுப்பதற்கும் கிடைத்த அங்கீகாரம். எனவே, முஸ்லிம் அமைப்புகள் அனைவரும் எங்களோடு இணையுங்கள்; உங்கள் அனைவருக்கும் பாடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜவாஹிருல்லா பேசினார்.

No comments:
Post a Comment