கொழும்பு: தமிழரைக் கொன்றதற்காக 30 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதை ராஜபக்சே நிராகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ராகியர் மனோகரன் என்பவர் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு தலைவர் என்ற முறையில் ராஜபக்சே நஷ்டஈடு தரவேண்டும் என்று கோரி அமெரிக்காவைச் சேர்ந்த அவரது உறவினர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இலங்கை விதிகளின்படி அதிபர் விதிவிலக்கு பெற்றவர் என நீதித்துறை அமைச்சகச் செயலர் சுகதா காம்லத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்மன்களுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம். எங்களது சட்ட நிலைப்பாடு குறித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்துக்கு கடந்த வாரமே தெரிவித்துவிட்டேன் என காம்லத் குறிப்பிட்டார்.
ஐநா சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராஜபக்சே செப்டம்பரில் நியுயார்க் வரவிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ராஜபக்சே அமெரி்க்கா செல்வதை தடுக்க முடியாது:
இந் நிலையில் ராஜபக்சே அமெரிக்கா செல்வதை யாரும் தடுக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ராஜபக்சேவுக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின்படி அரசு பதவியில் உள்ள தலைவர்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகவும், இதனால் அவரது பயணத்தைத் தடுக்க முடியாது என்றும் இலங்கை தெரிவித்துள்ளது
Thatstamil

No comments:
Post a Comment