மீனவர்கள் இறந்ததை மறைத்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது விசாரணை நடத்த, தமிழக முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, ம.ம.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். அவர் கூறியதாவது: இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தேவையற்றது. தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை போர் குற்றவாளி என அறிவித்து கண்டிக்க வேண்டும் என ஐ.நா. சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏளனத்திற்குரியது என சுப்பிரமண்யசுவாமி வர்ணித்ததை ம.ம.க., வன்மையாக கண்டிக்கிறது. தேர்தலின் போது நான்கு மீனவர்கள் இறந்தது தெரிந்தும், தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என திட்டமிட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைத்துவிட்டார். அவர் மீது விசாரணை நடத்த, தமிழக முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும். த.மு.மு.க., வின் வங்கி பரிவர்த்தனை சரியான முறையில் உள்ளது என வருமான வரித்துறை சான்று அளித்துள்ளது. சி.பி.ஐ., மட்டும் வெளிநாட்டில் அனுமதியின்றி நன்கொடை வங்கியுள்ளோம் என கூறிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கும் முறையாக கோர்ட்டில் ஆஜராகி வருகிறோம், என்றார்.
நன்றி: தினமலர்
No comments:
Post a Comment