எதற்காகவும் காத்திருக்காதீர்கள்
ஒருநாள் சாத்தான் கூட்டத்தை கூட்டினார், விஷயம் என்னான்னா இந்த பூமியை எப்பிடி சீக்கிரம் அழிக்கலாம் அப்பிடின்னு. எல்லா பேரும் யோசிக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரம் அமைதி
"நான் போயி பூமியை அழிச்சுட்டு வரேன்" ஒரு குரல் கூட்டத்தில கேட்டது
"எப்பிடின்னு சொல்லு" - தலைமை சாத்தான் கேட்டுச்சு
"அண்ணன் தம்பிக்கு நடுவுல பகையை ஏற்படுத்துறேன், அப்புறம் மனுசனுக்கு மனுஷன் அடிச்சுக்கிட்டு சீக்கிரம் இந்த பூமி அழிஞ்சுடும்"
"அது சரியா வரும்னு தோணலை வேற ஏதாவது சொல்லு" - தலைமை சாத்தான் சொல்லுச்சு
இன்னொரு சாத்தான் ஏந்துருச்சு
"நான் மனுஷ மனசுக்குள அன்பு இல்லாம பண்ணிடுறேன் அப்புறம் அவங்க சீக்கிரம் அழிஞ்சுடுவாங்க"
இப்பவும் தலைமை சாத்தானுக்கு திருப்தி இல்லை "வேற" அப்பிடின்னுச்சு
இன்னொரு குட்டி சாத்தான் எந்திருச்சு "நான் மனுஷ மனசுல பேராசையை உருவாக்கிடுறேன், அந்த ஆசையே அவங்க அழிச்சுடும்"
"நான் வேணா மனுசங்களுக்கு பொறாமையை, அகங்காரம், கர்வம் எல்லாத்தாயும் ஏற்படுத்துறேன், அப்புறமென்ன அவங்களே அழிச்சுக்கிடுவாங்க"
"வேற உருப்படியா ஏதாவது சொல்லுங்க" - தலைமை சாத்தான் சொன்னது
கடைசியா ஒரு வயசான சாத்தான் எழுந்து
"நான் மனுசங்க கிட்ட கடவுளை பத்தி சொல்றேன், அவர் எவ்வளவு நல்லவர், அவருடைய திட்டங்கள் எல்லாம் எவ்வளவு அருமையானதுன்னு எடுத்து சொல்றேன். கடவுள் மனுஷன் கிட்ட என்ன எதிர்பார்க்கிறார்ன்னு சொல்றேன். நேர்மை, நீதி, ஒழுக்கம் மற்றும் வீரம் பத்தி எடுத்து சொல்றேன், அவங்களை அதே மாதிரி செய்யவும் வற்புறுத்துறேன்."
இதை கேட்ட தலைமை சாத்தானுக்கு ஒரே எரிச்சல், இருந்தாலும் அந்த வயசான சாத்தான் தொடர்ந்து பேசுச்சு
"என்ன தான் எல்லாம் நல்லா இருந்தாலும் ஒண்ணும் அவசரம் இல்லை, இதை எல்லாம் நாளைக்கு செய்யலாம்ன்னு சேர்த்து சொல்லுவேன், எல்லா சூழ்நிலைகளும் சாதகமா வர்ற வரை காத்து இருங்கன்னு சொல்லுவேன். "
இதை கேட்ட தலைமை சாத்தான், "நீங்க தான் சரியான ஆள் உடனே பூமிக்கு புறப்படுங்க" அப்பிடினு சொல்லுச்சு
நீதி
செய்ய வேண்டியதை நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும், எல்லாம் சரியாய் இருக்கும் போது செய்ய வேண்டும் என்று காத்து இருந்தால் எதையும் செய்ய முடியாது

No comments:
Post a Comment