Monday, June 27, 2011

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை..

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக முகமது ஜான் பதவியேற்பு

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

ஆட்சி அமைத்தவுடன் அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்று, சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ. பதவியேற்பு நடைபெறும் தருவாயில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மரியம் பிச்சை திருச்சி அருகே கார் விபத்தில் பலியானார்.

மேலும் மரியம்பிச்சைக்கு ஒதுக்கப்பட்ட துறையினை கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான சின்னையா ஏற்றுக் கொண்டார்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் பதவியேற்கிறார். வரும் புதன்கிழமை சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார். மரியம்பிச்சை காலமானதால் சிறுபான்மை இனத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அமைச்சரவையில் சில இலாகா மாற்றம் செய்துள்ளார்
- நன்றி மாலைமலர்.

No comments:

Post a Comment