இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவில் ஜெயலலிதா தலையிட முடியாது: அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
இந்திய மத்திய அரசாங்கத்துடனான இலங்கையின் இராஜதந்திர உறவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எந்தவிதத் தலையீட்டையும் மேற்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பிற்கிணங்க மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி தமிழ் நாட்டு அரசாங்கம் மத்திய அரசுக்கு அழுத்தங்களையோ சிபாரிசுகளையோ வழங்க முடியாதென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டுகின்றார்.
நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தமிழக மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும். அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமிழக முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்ற போது நான் இலங்கை அரசின் சார்பில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தேன்.
இலங்கை அரசாங்கம் மத்திய அரசாங்கத்துடனேயே முக்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது. அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமிழ் நாட்டுக்குக்கிடையாது. தமிழ் நாடு மாநில அரசாங்கத்துடன் இலங்கை சம்பந்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வோம். அதில் எவ்வித பிரச்சினையுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://publication.samachar.com/topstorytopmast.php?sify_url=http://www.tamilwin.com/view.php?224WQjb0bcbr92Sd4e3IIBd302c7pG4edde4Gp7c302dLLwI3e4dS29rbcb0bjQK42

No comments:
Post a Comment