Wednesday, March 9, 2011

குழந்தைகள் படுகொலை: சமரச பேச்சுக்கு ராபர்ட் கேட்ஸ் ஆப்கன் வருகை

குழந்தைகள் படுகொலை: சமரச பேச்சுக்கு ராபர்ட் கேட்ஸ் ஆப்கன் வருகை

காபூல்,மார்ச்.8:குழந்தைகள் உள்பட அப்பாவி மக்களை கொன்றுக் குவித்து வரும் அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரமக்கார அமெரிக்க நேட்டோ படையினருக்கெதிராக ஆப்கானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இச்சூழலில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ராபர்ட் கேட்ஸ் சமரசப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு பயணமாக ஆப்கான் வந்துள்ளார்.

ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயி, நேட்டோ ராணுவத் தலைவர் டேவிட் பெட்ரோஸ், இதர ராணுவ கமாண்டர்கள் ஆகியோருடன் தனது பயணவேளையில் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பாதுகாப்பு பொறுப்பை ஆப்கான் படையினருக்கு ஒப்படைப்பதற்கான தியதியும் இதர நடவடிக்கைகளும் இம்மாதம் இறுதியில் அறிவிப்பதாக ஹமீத் கர்ஸாயி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்துதான் கேட்ஸ் எதிர்பாராதவிதமாக ஆப்கானுக்கு வருகைத் தந்துள்ளார்.

ராணுவம் ஆப்கானிலிருந்து வாபஸ் பெற்றாலும், பயிற்சி அளிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் குறிப்பிட்ட ராணுவத்தினர் ஆப்கானில் தொடர்வார்கள் என கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுத்தொடர்பாக இருநாடுகளும் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானின் தென்கிழக்கு மாகாணங்களுக்கு கேட்ஸ் செல்வார். பேச்சுவார்த்தையை தவிர தனியாக தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்பட மாட்டாது என அவருடைய ஊடக செயலாளர் தெரிவிக்கிறார்.

கடந்த வாரம் குணார் மாகாணத்தில் விறகு சேகரித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் 9 பேரை நேட்டோ படையினர் கொடூரமாக குண்டுவீசி கொலைச் செய்தனர். இதனை ஹமீத் கர்ஸாயி கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருந்தார்.

நேட்டோ படைத்தலைவர் மன்னிப்புக் கோரியது இந்த அக்கிரமச் செயலுக்கு பதிலாக ஆகிவிடாது என ஹமீத் கர்ஸாயி கூறியிருந்தார். இரு நாடுகளிடையேயான உறவு சீர்குலையுமளவுக்கு இச்சம்பவக் கொண்டு செல்லும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.

இவ்வருடம் ஜூலை மாதம் ராணுவத்தினரை வாபஸ் பெறப்போவதாக ஒபாமா அறிவித்திருந்தார். 2014-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்து முற்றிலுமாக வாபஸ்பெறப்படும்.

செய்தி:http://paalaivanathoothu.blogspot.com/2011/03/blog-post_5278.html

No comments:

Post a Comment