வாகன நெருக்கடியே இல்லாத ஒரு அதிசய நகரம் !!!
உலகம் பசுமைப் போர்த்திய சொர்க்கம் என்ற நிலையில் இருந்து இரைச்சல் மிகுந்த நரகமாய் மாறிவிட்டது, மேன்மேலும் மாறிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நகரத்தின் வளர்ச்சியும் சந்தடிகள் மிகுந்தத்தாகவும், வாகனங்கள் பெருகியதாகவும் இருக்கின்றது. ஆனால் இத்தாலி நாட்டில் உள்ள பெருகியா என்னும் நகரம் வாகனங்களை குறைத்துக் கொண்டே வருகிறது. இந்நகரம் பசுமை நகரமாக மாறிவருவதை நேசனல் ஜியோகிராபிக் அண்மையில் ஒரு தொடர்க் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பியது. எரிசக்தி குறைந்து வருவதையும், மக்கள் தொகையுடன் வாகனத் தொகையும் அதிகரித்து வருவதும் பெரும் சிக்கல்களை உண்டாக்கி உள்ளது. ஒவ்வொரு நகர வாசியின் வாழ்க்கையை நெருக்கடி மிகுந்தத்தாக மாற்றியுள்ளது.
ஆனால் பெருகியாவின் கதையோ வேறுவிதமாக அமைகிறது. இங்கு வாகனங்களை பெரிதும் காண முடியாது. வேலை முடித்து வீடு திரும்புவர்களும், பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்புபவர்களும், மாலை நேர அங்காடிகளுக்கு செல்பவர்களும் வாகனத்தை செலுத்தவோ, ட்ராஃபிக்கில் மாட்டிக் கொண்டு சுச்சுக் கொட்டவோ, வாகனங்களைத் தறிக்க இடம் தேடி அலைவதோ இல்லை. கவலை இல்லாமல் அவரவர் சென்று வருகின்றனர்.
மொத்தத்தில் ட்ராபிக் என்பதே இல்லை என்பது ஆச்சரியத்தை தருகிறது.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இந்த நகரமும் மற்றா நகரங்களைப் போல கார், பேருந்து, ட்ரக் என பெருகி வழிந்துக் கொண்டிருந்ததாம். ஒவ்வொரு தெருமுனையும் வாகன நெருக்கடியில் முட்டிக் கொண்டு நிற்குமாம். இதனால் அங்கு வசித்த பலர் எரிச்சல் அடைந்தனராம். பெருகும் வாகன நெருக்கடி ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரத்தையே குலைத்துவிடும். ஆனால் பெருகியா வேறுவிதமாக திரும்பியது எப்படி?
1980களின் பின்னரே பெருகியா வாகன நெருக்கடியை விலக்க ஆரம்பித்தது. இதன் பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரசியமானது. அக்காலக்கட்டத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் பழங்கால நகர எச்சங்களைக் கண்டுபிடித்தனர். அதாவது பழங்காலத்தில் அதன் நகர நிலத்தில் இருந்து தாழ்மையான பகுதியில் இருந்தது தான். மலைகள் சூழந்த பெருகியாவின் அழகிய தெரு அமைப்புகளை மிகவும் பழங்காலம் தொட்டே அந்நகர் கொண்டிருப்பதை உணார்ந்த உள்ளாட்சி நிர்வாகத்தினர், புதிய நகரத்தை தாழ்வாக கட்ட திட்டமிட்டனர். ஆனால் சாலைகளை மேல்தட்டில் ஒரு மிதக்கும் அல்லது நகரும் படிக்கட்டுகளைப் போலக் கட்டினார்கள். அதனை நகரின் பிறப்பகுதிகளோடு பாலங்கள் கொண்டு இணைத்தார்கள்.
பிறகு மினிமெட்ரோ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இது சப்வே என்னும் தாழ்தள/உயர்தள இரயில்களைக்காட்டிலும், பேருந்துகளைக் காட்டிலும் மிகவும் எளிமையானதாக அமைத்தனர். பெரும்பாலான கார்களை பயன்படுத்த தடை விதித்தனர். இதனால் பசுமை பெருகும் பெருகியாவின் நகரங்கள் வாகன நெருக்கடி குறைந்ததாக இன்றுக் காட்சித் தருகிறது.
” இது தான் பெருகியா ” என்றார் அந்நகரின் மேயர் விலாடிமிரோ பொக்காலி. ” எங்கள் நகரம் கலைகளிலும், வரலாற்றிலும் பெருமை வாய்ந்த நகரம். அவற்றை பேணுவதற்கு முயற்சி செய்ததன் பயனே மினி மெட்ரோக்கள்” என்றார்.
மேற்கண்ட படத்தில் காண்பவையே மினி மெட்ரோக்கள் இவை சப்வே போலவே சிறிய கார்கள் ஆகும். தண்டவாளத்தில் ஓடும் இவைகள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மினிமெட்ரோ ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு முறை பயணிக்க 2 டாலர்கள் மட்டுமே செலவாகும். இது நகரின் அனைத்து சாலைகளையும் இணைக்கின்றன. நகரம் என்பது கீழே இருப்பதால், எதோ மாடிப்படியில் ஏறி செல்வதைப் போன்ற அனுபவமே ஏற்படுகிறது. கீழ இருக்கும் சாலைகள் பெரும்பாலும் மிதிவண்டிப் பயணிகளாலும், நடைப்பயணிகளாலுமே பயன்படுத்தப்படுவதால், வாகனப் புகையோ, ஹாரன் சத்தங்களோ, வாகன நெருக்கடியோ எதுவும் இல்லை. மரங்கள் சூழந்த பெருகியா அழகின் சொர்க்கமாய் இருக்கின்றது. இங்கு வசிப்போருக்கு பெற்ரோல் விலையைப் பற்றியெல்லாம் கூட கவலையே இல்லை. இப்படியான நகர வடிவமைப்பு நம் தமிழ்நாட்டில் உள்ள நகரில் வரவேண்டும் என்பதே எனது ஆசை !!!
No comments:
Post a Comment