மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற திமுக முடிவு
சென்னை, மார்ச் 5- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற திமுக முடிவு செய்துள்ளது.
இன்று மாலை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், அமைச்சரவையில் இருந்து வெளியேறினாலும், பிரச்னை அடிப்படையில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம் என்றும் திமுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"நாங்கள் கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் விரும்பவில்லை" என்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக-காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகளை ஒதுக்க இறுதியாக திமுக முன்வந்தது. ஆனால், 63 தொகுதிகளும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை அக்கட்சி விருப்பப்படியே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த திமுக மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேற இன்று முடிவு செய்துள்ளது. Tnks http://www.dinamani.com/

No comments:
Post a Comment